விழுப்புரம் - தமிழக மாவட்டங்கள்
சிட்கோ தொழிற்கூடங்கள் :
கள்ளக் குறிச்சி, தியாகதுர்கம், எலவானாசூர் கோட்டை, திருக்கோவிலூர் முதலிய இடங்களில் 101 சிறு தொழிற் கூடங்களை சிட்கோ கட்டிக் கொடுத்துள்ளது. இவற்றில் தீப்பெட்டித் தயாரிக்கும் சிறு தொழிலுக்கு இவை பயன்படுகின்றன.
வழிபாட்டுத் தலங்கள் :
திருக்கோவலூர் :
இவ்வூர் பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஊர் மேலூர், கீழூர் என 2 பிரிவாக உள்ளது. சிவன் கோவில் கீழூரிலும், திருவிக்கிரமப்
திருக்கோவலூர் |
திருவறையணி நல்லூர் :
அறை கண்ட நல்லூர் எனத் தற்போது அழைக்கப்படுகிறது. திருக்கோவிலூரில் உள்ள பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. கோயில் குன்றின் மேல் கட்டப் பட்டுள்ளது. இக்குன்றின் மீது நின்று பார்த்தால் திருவண்ணாமலையின் திருமுடி தெரியும். இறைவன் மேற்கு பார்த்து உள்ளார். பெருங்குளம் ஒன்று பாறையில் உள்ளது. இதற்குப் பக்கத்தில் ஐவர் குகைகளும் சிறு அறையும் உள்ளன.
திருவிடையாறு :
திருவெண்ணைநல்லூர் சாலை என்னும் புகை வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 5 கி.மீ உள்ளது. இறைவன்: இடையாற்றுநாதர்; இறைவி: சிற்றிடை நாயகி.
திருநெல்வெண்ணெய் :
இது தற்போது நெய்வெணை என அழைக்கப்படுகிறது. இவ்வூர் உளுந்தூர்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கில் 7 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன்: வெண்ணெய்யப்பர். இறைவி: நீலமர்க்கண்ணம்மை.
திருவடுகூர் :
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் புகைவண்டி வழித்தடத்தில் சின்னபாபு சமுத்திரம் என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் ஆண்டார் கோவில் என்னும் திருவடுகூர் அமையப் பெற்றுள்ளது.
திருவெண்ணெய் நல்லூர் :
இறைவன் தடுத்தாட் கொண்டநாதர், அம்மை: வேற்கண்மங்கை; விழுப்புரத்திற்கு மேற்கே 19 கி.மீ தொலைவில் உள்ளது. திருவருட்டுறை என்பது கோயிலின் பெயர். 'சிவஞானபோதம்' இயற்றிய மெய்கண்டதேவ நாயனார் இருந்த ஊர்.
திருமுண்டீச்சரம் :
திருக்கண்டீச்சரம் என்னும் இப்பகுதி திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கில் 5 கி.மீ தொலைவில் உள்ளது.
திருவாமாத்தூர் :
இறைவன்: அழகியநாதர்; அம்மை: அழகிய நாயகி. விழுப்புரம் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 7 கி.மீ. தொலைவில் பம்பை என்னும் சிற்றாற்றின் வடகரையில் உள்ளது. புலவர் புராணம் பாடிய திருபுகழ்த் தண்டபாணியடிகள் (சமாதி) கற்குகை இங்குள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விழுப்புரம் - Viluppuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இறைவன், விழுப்புரம், என்னும், தொலைவில், tamilnadu, மாவட்டங்கள், புகைவண்டி, தமிழக, கோவில், வடமேற்கில், நிலையத்திலிருந்து, நல்லூர், அம்மை, தமிழ்நாட்டுத், சிறு, பெண்ணையாற்றின், தகவல்கள், திருக்கோவலூர், இறைவி, நாயகி, viluppuram, | , திருவெண்ணெய், திருவடுகூர், information, districts, அழைக்கப்படுகிறது, கபிலர், பெயர், இவ்வூர், உள்ள, உயிர், தற்போது, சிட்கோ, ஒன்று, வடகரையில்