விழுப்புரம் - தமிழக மாவட்டங்கள்
சங்கராபரணி ஆறு :
செஞ்சி வட்டத்தில் சில மைல்கள் அளவே ஓடி விவசாயத்திற்கும் பயன்படுகிறது. இதுவும் சிறிய ஆறுகளில் ஒன்று. மழைக் காலத்தைத் தவிர பிற மாதங்களில் நீர் இருக்காது. இவை தவிர பெண்ணையாறு, கோமுகியாறு, மணிமுத்தாறு போன்றவையாலும் பலன் பெறுகிறது. வீடூர் அணைத்தேக்கம் தவிர 4 நீர்த் தேக்கங்களால் விவசாயம் செழிக்கிறது.
வேளாண்மை :
மொத்த சாகுபடி பரப்பு: 3,21,978 ஹெக்டேர். இதில் நெல் மட்டும் 1,29,00 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. நெல்லுக்கு அடுத்து கரும்பு, மணிலா உற்பத்தி மாவட்டம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கடுத்த படியாக பருத்தி, பருப்பு, சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் நவதானியங்களும் விளைவிக்கப்படுகின்றன.
கல்ராயன் மலை :
கள்ளக் குறிச்சி வட்டமே கூடுதலான வளமும், காட்டு வளமும் உடையது. கல்வி ராயன் மலை என்பதே நாளடைவில் கல்ராயன்மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையில் தேக்கு, சந்தனம், கடுக்காய், மூங்கில், முந்திரி முதலியவை கிடைக்கின்றன.
முள்ளூர் மலைக்காடு :
திருக்கோவலூர் வட்டத்திலும் சிறு, சிறு மலைக் குன்றுகளும், காட்டுப் பகுதிகளும் உள்ளன.
செஞ்சிமலை :
கல்ராயன் மலைத் தொடர்ச்சியே செஞ்சி மலையாகும். செஞ்சி வட்டத்திற்கு எல்லையாக அமைந்திருப்பதால் அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
கனிவளம் :
பயர் க்ளே என்கிற கனிமம் திண்டிவனத்தில் கிடைக்கிறது. ஸ்டீடைட் என்கிற தாது கள்ளக் குறிச்சி வட்டத்தில் 25,000டன் இருப்பதாக அளவிடப்பட்டுள்ளது. சிலிகாமண்-அகரத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளிலும், அதை அடுத்த மரக்காணம் பகுதியிலும் இரண்டு இலட்சம் டன்கள் இருப்பதாக கூறுகின்றனர். பிளாக் கிரானைட் (கருப்பு கருங்கல்) வானுர், திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் பகுதிகளில் ஏற்றுமதிக்கு உகந்த-தரமான கற்கள் 25,00,000 க்யூ.எம் கிடைக்கிறது. மல்டி கலர்டு கிரானைட் (பலவண்ண கருங்கல்) செஞ்சி, விழுப்புரம், கள்ளக் குறிச்சியில், கிடைக்கிறது. புளுமெட்டலும் இதே பகுதிகளில்
கிடைக்கின்றது.
தொழில்கள் :
ஆலைகள்:
சர்க்கரை ஆலைகள், விழுப்புரம் வட்டம் முண்டியம்பாக்கத்திலும், கள்ளக்குறிச்சி வட்டம் மூங்கில் துறைப்பட்டிலும் செயல்பட்டு வருகின்றன. நூ ற்பாலைகள் - 3 விக்ரவாண்டி, சாரம், கள்ளக்குறிச்சி. விழுப்புரத்தில் வனஸ்பதி தொழிற்சாலை உள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் இரசாயனக் கலவை உரத் தொழிற்சாலைகள் உள்ளன.
பெரிய நடுத்தர தொழிற்சாலைகள்
தொழிற்சாலைகள - தயாரிப்பு
ஆற்காடு டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் கள்ளக்குறிச்சி - நூ ல்
செளத் இண்டியாசுகர்ஸ் முண்டியம்பாக்கம் - சர்க்கரை
சதர்ன் அக்ரிபுரன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட் முண்டியம்பாக்கம் - ஸ்பிரிட்
செளத் ஆற்காடு டிஸ்டிரிக்ட் கோவாபரேடிவ் ஸ்பின்னிங் மில் சாரம் - நூ ற்பாலை
செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை
பெரிய செவலை - சர்க்கரை
தி மெட்ராஸ் வனஸ்பதி விழுப்புரம் - வனஸ்பதி
தி. நாகம்மை காட்டன் விக்கிரவாண்டி - நூ ற்பாலை
ஆரோபுட் கம்பெனி புளிச்சபள்ளம் - கோதுமை, பிஸ்கட் பால்பவுடர், சேமியா
பாண்ட்ஸ் இந்தியா பாஞ்சாலம ் - வாசனை திரவியங்கள்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விழுப்புரம் - Viluppuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, tamilnadu, சர்க்கரை, மாவட்டங்கள், தமிழக, கிடைக்கிறது, கள்ளக், வனஸ்பதி, தவிர, தமிழ்நாட்டுத், தகவல்கள், வட்டம், ற்பாலை, | , பகுதிகளில், ஆலைகள், விழுப்புரத்தில், பெரிய, செளத், முண்டியம்பாக்கம், தொழிற்சாலைகள், ஆற்காடு, சாரம், சிறு, வட்டத்தில், கல்ராயன், இந்தியா, information, viluppuram, districts, குறிச்சி, வளமும், இருப்பதாக, கிரானைட், என்கிற, மூங்கில், அழைக்கப்படுகிறது, கருங்கல்