விழுப்புரம் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | விழுப்புரம் |
பரப்பு : | 7,194 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 3,458,873 (2011) |
எழுத்தறிவு : | 2,195,776 (71.88 %) |
ஆண்கள் : | 1,740,819 |
பெண்கள் : | 1,718,054 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 481 |
வரலாறு :
தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.
எ-கா : திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு. சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர். பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப்பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது.
பாரி மகளிரை மணந்த தெய்வீக மன்னனும் திருக்கோவிலூரை ஆண்டவன். கடைசி பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் கெடிலத்தின் தென்கரையில் உள்ள சேந்த மங்கலத்தில் கி.பி.1243 முதல் 37 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டான் என அவன் கல்வெட்டு உரைக்கிறது. ஆற்றுரை தலைநகராகக் கொண்டு, இப்பகுதியை ஆண்ட ஏகம்பவாணன் பற்றி பெருந்தொகை பாடல்களால் அறிகிறோம். சோழராட்சிக்குப் பின் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், கர்நாடக ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேயர் என அவரவர் கால ஆட்சியில் அவர்களிடம் சென்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் பாலாற்றுக்கு வடக்கில் இருப்பவை வடாற்காடு எனவும், தெற்கில் இருப்பவை தென்னாற்காடு எனவும் பிரிக்கப்பட்டன. பின்னர் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து 1993 செப்டம்பர் 30 இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
எல்லைகள் :
விழுப்புரம் மாவட்டத்தின் தெற்கே திருச்சிராபள்ளி, கடலூர் மாவட்டங்களும்; கிழக்கே வங்காள விரிகுடாவும்; வடக்கில் காஞ்சிபுரம் மாவட்டமும், மேற்கே திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மவட்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
உள்ளாட்சி நிறுவனங்கள் :
நகராட்சிகள்-2, ஊராட்சி ஒன்றியம்-22, பேரூராட்சிகள்-16.
கல்வி :
தொடக்கப்பள்ளிகள் - 1450 உயர்/மேல்நிலை - 144 கல்லூரிகள் - 3
ஆற்றுவளம் :
கெடில நதி :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மையனுர் என்னும் ஊருக்கருகில் தோன்றி 112 கி.மீ ஓடி கடலூருக்கருகில் கலக்கிறது. திருக்கோவிலூர் வட்டத்தில் தாழனோடை என்னும் துணையாறு கெடிலத்தோடு கலக்கிறது. திருக்கோவலூருக்கு அருகில் உள்ள வீரமடை, சித்தலிங்க மடம் என்னும் ஊர்களுக்கருகில் பெண்ணையாற்றிலிருந்து பிரியும் சிற்றாறு மலட்டாறு எனப்படுகிறது.
செஞ்சி ஆறு :
சங்கராபரணி ஆற்றின் கிளை நதியாகச் செஞ்சி வட்டத்தில் ஓடும் ஆற்றுக்கு அதுபாயும் பகுதியின் பெயரால் செஞ்சி ஆறு என அழைக்கப்படுகிறது. பெரிதும் மழைக் காலத்தில்தான் நீர் நிறைந்து காணப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விழுப்புரம் - Viluppuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - விழுப்புரம், tamilnadu, மாவட்டங்கள், எனவும், தமிழக, என்னும், இப்பகுதியை, செஞ்சி, தமிழ்நாட்டுத், தகவல்கள், ஆட்சியில், வடக்கில், இருப்பவை, கலக்கிறது, | , வட்டத்தில், ஆங்கிலேயர், தென்னாற்காடு, ஆண்டதாக, மக்கள், information, districts, நாட்டிற்கும், மலையமான், அறிகிறோம், அவரவர், viluppuram, உள்ள