திருநெல்வேலி - தமிழக மாவட்டங்கள்
செங்கோட்டை :
வட்டத் தலைநகர். மேற்கு தொடர்ச்சி மலைக் காணப்படுகிறது. தமிழ் நாட்டிலேயே சிறிய வட்டம் 194 ச.கி.மீ; இங்கு மழை அதிகம் பெறுகிறது. ஜூலை முதல் நவம்பர் வரை நிலவும் காலநிலை உடல் நலத்திற்கு ஏற்றது. இவ்வட்டத்தில் மோட்டை அணை, ஸ்ரீமூலபேரி அணை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முக்கியமானத் தொழில் வேளாண்மையே ஆகும். சொந்த தேவைக்கு ஆனைக் கொம்பன் நெல்லையும், விற்பனைக்குச் சிறுமணிநெல்லையும் பயிரிடுகின்றனர். முதல் போகத்தில் நெல்லுடன் சோளம், உளுந்தும் இரண்டாவது போகத்தில் மிளகாய், வெங்காயம் ஆகியவையும் பயிராகின்றன. மண்பாண்டம் செய்வதும், பிரம்புக் கூடைகள் தயாரிப்பதும் இங்கு சிறந்த முறையில் நடைபெறுகின்றன. கட்டளைமலைக் குடியிருப்பில் பாலராமவர்மா பஞ்சாலை இருக்கிறது. செங்கோட்டை 'மண்வெட்டி' புகழ்பெற்றது. 'தோசைக்கல்' இங்கு செய்யப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் சந்தை கூடுகிறது. பேல் கட்டப் பயன்படும் மூங்கில் பட்டைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தென்காசி :
காசி விசுவநாதர் கோவில் |
கி.பி. 1445 இல் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட காசி விசுவநாதர் கோவில் இங்குண்டு. பத்துக் கைககள் கொண்ட நடராசர் சிலையும், 16 கைகள் கொண்ட திருஉருவமும் இக்கோயிலில் உண்டு. இக்கோவிலில் நுண்ணிய வேலைபாடு அதிகம். இங்கு ஐப்பசி, மாசி பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வேளாண்மையும், நெசவுத்தொழிலும் நன்கு வளர்ந்து வருகின்றன. பட்டுப்பூச்சி வளர்க்கும் பண்ணை உள்ளது. சாயத்தொழிலும், நல்லெண்ணை வணிகமும், மரம் அறுக்கும் தொழிலும் நடை பெறுகின்றன. இங்குள்ள தோட்டங்களில் ரஸ்தாளி வாழப்பழம் மிகுதியாக விளைகிறது. மாம்பழ ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றும் செயல்படுகிறது.
அம்பா சமுத்திரம் :
வட்டத் தலைநகர். பொதிகை மலையும், பொருநையாறும் அமைந்த வளமான ஊர். இவ்வட்டத்தின் பரப்பளவு 1280 ச.கி.மீ இரு பருவக்காற்றாலும் மழை பெறுகிறது. சில சமயம் 1500 மி.மீ. வரை பெய்வதுண்டு. இம்மாவட்டத்தின் ஆறுகள் அனைத்தும் இந்த வட்டத்தில் தான் தோன்றுகின்றன. இவ்வட்டத்தில் உள்ள மணிமுத்தாறு நகர அமைப்பு சிறப்பானது. இவ்வூர் செங்கோட்டை-திருநெல்வேலி இரயில் பாதையில் உள்ளது. இங்கு கல்வி, மருத்துவம், வட்ட அலுவலகங்கள், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முதலியன உள்ளன. அம்பாசமுத்திரம் 'அம்பை' என அழைக்கப்படுகிறது. இங்கு சீரான காலநிலை நிலவுவதால் உடல் நலத்திற்கு ஏற்ற ஊர். நெசவுக்கு பெயர்பெற்றது. இங்கு நெல் விளைச்சலும் மிகுதி. கேரளாவிற்கு நெல் ஏற்றுமதியாகிறது. மரவியாபாரம் சிறப்பான தொழில். குழந்தை விளையாட்டுப் பொருள்கள் செய்யப்படுகின்றன. கல்வி வளர்ச்சியில் இவ்வூர் முன்னணி வகிக்கிறது.
திருநெல்வேலி :
நெல்லையப்பர் கோவில் |
இங்குள்ள நெல்லையப்பர் கோவில் புகழ்பெற்றது. ஐவகை மன்றங்களில் இங்குள்ளது செம்பு மன்றம். நடுவில் உள்ள மணி மண்டபத்தில பெருங்கல்தூண் உள்ளன. ஒவ் வொன்றும் தனித்தனிச் சுரம் எழுப்பும் தன்மை உடையன. இங்கு வெள்ளை நந்தி உள்ளது. இக்கோவிலில் நுட்பமான வேலைகளைக் காணலாம். இறைவன் 'வேய்முத்த நாதன்'. அம்மை : காந்திமதியம்மை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, திருநெல்வேலி, உள்ளது, தலைநகர், கோவில், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, கல்வி, தொழில், பெறுகிறது, தமிழ்நாட்டுத், செங்கோட்டை, வட்டத், தகவல்கள், பண்ணை, கொண்ட, பரப்பளவு, மிகுதி, நெல்லையப்பர், இக்கோவிலில், உள்ள, அலுவலகங்கள், நெல், | , மருத்துவம், இவ்வூர், நிறுவனங்கள், இங்குள்ள, போகத்தில், தொடர்ச்சி, அதிகம், காலநிலை, மேற்கு, information, tirunelveli, districts, உடல், நலத்திற்கு, தென்காசி, காசி, செய்யப்படுகின்றன, புகழ்பெற்றது, இவ்வட்டத்தில், சிறந்த, விசுவநாதர்