திருநெல்வேலி - தமிழக மாவட்டங்கள்
வழிபாட்டிடங்கள் :
திருநெல்வேலி மாவட்டத்தில் காணவேண்டிய முக்கியமான வழிபாட்டிடங்கள் பின்வருபவை : திருநெல்வேலி-நெல்லைப்பர்; சங்கரநாராயணன் கோவில்; சொரிமுத்தையன் கோவில்; திருமலைக் கோவில்; நாங்குநேரி; உவரி-சுயம்புலிங்க சுவாமி கோவில்; தென்காசி-விஸ்வநாதர் கோவில்; போன்றவை சைவ-வைணவத் தலங்கள் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறித்துவ தலங்கள் வருமாறு : திருமலைப்புரம்; டோனாவூர்; திசையன் விளை; இடையன் குடி, உவரி, வடக்கன்குளம், பாளையங்கோட்டை; இஸ்லாமியர்களுக்கு கோயில்பத்து, பொட்டல் புத்தூர் தர்கா, கீழ்க்கடைய நல்லூர் பள்ளிவாசல், தென்காசி காட்டுபாவா பள்ளி வாசல், புளியங்குடி மசூதி, மேலச் செவல் நைனா முகம்மது பள்ளிவாசல் போன்றவை முக்கியமான வழி பாட்டிடங்களாகும்.
தொழில் வளர்ச்சி :
தொழில்வளர்ச்சி இன்னும் பெருகவில்லை. பாரம்பரியத் தொழில்களே பெருமளவு நடந்து வருகின்றன. சுதந்திரத்திற்கு பிறகு பாபனாசம் மின்னாக்க நிலையம் மூலம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள் மின்வசதி பெற்றுள்ளன.
நூல் ஆலைகள் :
நீராவியைக் கொண்டு இயக்கப்படும் ஆலைகள் இம்மாவட்டத்தில் தான் முதன் முதலாக நிறுவப்பட்டன. அது 'திருநெல்வேலி மில்' என அழைக்கப்பட்டது. இம் மாவட்டத்திலுள்ள நூல் ஆலைகள் : மதுரைமில், விக்கிரமசிங்கபுரம் கீதாஞ்சலி மில், சங்கரன் கோவில் ஸ்ரீ கணபதி மில், தச்சநல்லூர் கார்த்திகேயாமில், விரவநல்லூர் பலராமவர்மாமில், செங்கோட்டை நெல்லை காட்டன் மில், தாழையூத்து சவுத் இந்தியா கோவாபரேடிங் ஸ்பின்னங் மில் பேட்டை சங்கர் மில், தச்ச நல்லூர், சுந்தரம் டெக்ஸ் டைல்ஸ்-நாங்குனேரி; ராமலிங்கா மில்-மேலச்செவ்வல்.
இந்தியா சிமெண்டுத் தொழிற்சாலை :
1948-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்தது. இத்தொழிற்சாலை யிலுள்ள மூன்றாவது ஆலை இந்தியாவிலேயே பெரிய ஆலைகளுள் ஒன்று. தாழையூத்தின் சுற்று வட்டாரத்தில் 8 கி.மீ அளவில் சுண்ணாம்புக்கல் கிடைப்பதாலும், தூத்துக்குடி துறைமுகம் இப்பகுதியில் இருப்பதாலும் இத்தொழில் வளர்ச்சியடைந் துள்ளது. இத்தொழிற்சாலையின் உற்பத்தி நாளொன்றுக்கு 700 டன்னாகும். வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் பிற இடங்களின் வளர்ச்சியைக் காண்போம்.
சங்கர நாராயணன் கோவில் :
சங்கர நயினார் கோவிலுக்கு வடக்கே ஒரு பஞ்சாலைஇயங்குகிறது. இங்கு ஒரு வனஸ்பதி தொழிற்சாலையும் உள்ளது. ச.நா. கோவில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் பல தீப்பெட்டி தொழிற்சாலைகளும், மூன்று மூட்டைபூச்சி ஒழிப்பு மருந்து செய்யும்
சங்கர நாராயணன் கோவில் |
சங்கர நாயனார் கோவிலில் சிவனும், பெருமாளும் 'சங்கர நாராயண' வடிவத்தில் வழிபடப்படுகின்றனர். இங்கு ஆடி மாதத்தில் உற்சவத்தின் போது 'மாட்டுத் தாவணி' நடைபெறும் சங்கர நாராயணார் கோவில் கி.பி.1022 இல் கட்டப்பபட்டது. இக்கோவில் கோபுரம் 125 அடி உயரமானது. புலித்தேவரால் அமைக்கப்பட்ட உட்கோவில் மர வேலைபாட்டைக் காணலாம்.
நாங்குனேரி :
நெல்லை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ளது. நல்ல மழை பெறும் வட்டம். தென்கலை வைணவர்களுக்கு முக்கியமான 'வானமாமலை மடம்' இங்குள்ளது. திருநெல்வேலி யிலிருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் 28 கி.மீ தொலைவில் உள்ளது. நம்மாழ்வாரால் பாடல்பெற்றது. தங்கத்தால் இழைக்கப்பட்ட மண்டபம், தூண்கள், நகைகள் காணத் தக்கவை. இறைவன்: தோத்தாத்திரிநாதன். இங்கு தினமும் 5 படி எண்ணெய்யால் திருமுழுக்கு செய்யப்படுகிறது. எண்ணெய்யைச் சேர்க்கும் கிணறு 1800 ச.அடி உள்ளது. இங்கு கத்தோலிக்கர்கள் அதிகம் வாழ்கின்றனர். இங்குள்ள இராசக்க மங்கலத்தில் கட்டடம் கட்டப் பயன்படும் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், திருநெல்வேலி, மில், இங்கு, சங்கர, மாவட்டங்கள், உள்ளது, tamilnadu, தமிழக, தகவல்கள், முக்கியமான, ஆலைகள், இந்தியா, தமிழ்நாட்டுத், நாங்குனேரி, நெல்லை, செய்யப்படுகிறது, நாராயணன், செய்யும், வட்டம், | , மாவட்டத்தின், தலங்கள், வழிபாட்டிடங்கள், information, districts, tirunelveli, உவரி, தென்காசி, பள்ளிவாசல், நல்லூர், இம்மாவட்டத்தில், போன்றவை, நூல்