திருநெல்வேலி - தமிழக மாவட்டங்கள்
இராதாபுரம்:
வட்டத் தலைநகர் 'ராஜராஜபுரம்' என்பதே ராதாபுரமாயிற்று. இதன் பரப்பளவு 1563 ச.கி.மீ. இப்பகுதிகளில் மணற்காடு மிகுதி. பொதி மாட்டின் மீதே பொருள்கள் கொண்டு சொல்லப்படுவது இன்றும் இங்கு வழக்கம். இராதாபுரம் சிவன் கோவில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது. இப்படி சேரும் மஞ்சளை ஏலம் போடுவது வழக்கம்.
பாளையங்கோட்டை :
பாளையங்கோட்டை |
சீவலப்பேரி :
இங்கு சிற்றாறு, கயத்தாறு, பொருநை என்ற மூவாறுகளும் கூடுவதால் முக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. சித்திரை, ஆவணி மாதங்களில் மாட்டுச் சந்தை நடைபெறும்.
தச்சநல்லூர் :
திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ வடக்கே உள்ளது. பித்தளைப் பாத்திரத் தொழில் முக்கியமானது. இரண்டு நூலாலைகளும் மின்சார மோட்டார் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற் கூடமும் சர்க்கரை ஆலையும் இங்கு உள்ளன.
சிவசைலம் :
இங்கு அவ்வை ஆஸ்ரமமும், லட்சுமி ஆதார ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் உள்ளன.
சங்கர் நகர் :
இந்தியா சிமெண்ட் தொழிற்சாலையும், தொழில் கல்லூரியும் உள்ளன.
மத்தளம் பாறை :
தென்காசியிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. மாம்பழ வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறது.
பண்பொழி :
இதன் பெயர் பைம்பொழில். தென்காசிக்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது. இயற்கை அழகுடன் செறிந்த காடுகளைக் கொண்டது. சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் உள்ளது. சித்த வைத்திய மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன. தேங்காய் வியாபாரத்திற்கு ஏற்ற இடம். இக்குன்றின் மீது முருகனுக்கு கோவில் உளளது. 600 படிகள் ஏறிச் சென்று முருகனைத் தரிசிக்கலாம்.
வடகரை :
தென்காசியிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. நெல், தென்னைக்குப் பெயர் பெற்றது. பீடித்தொழில் இங்கு குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது.
காரையிருப்பு :
அரசாங்க விதைப்பண்ணை உள்ளது.
கடையம் :
தென்காசியிலிருந்து 15 கி.மீ தொலைவில் ஜம்பு நதிக்கரையில் இருக்கிறது. கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகர் இது. திங்கள் தோறும் சந்தை கூடுகிறது. பன்னீர் வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. ரோஜாப்பூ, தாழம்பூ, நார்த்தம் பழம் முதலியவை வெளியூர்களுக்குச் செல்கிறது.
கடைய நல்லூர் :
கடைய நல்லூர் 3 பகுதிகளைக் கொண்டது. மேல், கீழ்கடைய நல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம் என்பதே அது. இங்கு வியாழக் கிழமை சந்தை. முக்கியத் தொழில் நெசவு. துணிகளுக்கு பளபளப்பேற்றும் காலண்டரிங் ஆலை இங்கு உள்ளது.
கோட்டை மலை :
வாசுதேவ நல்லூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. சுற்றுலாப்பயணத்திற்கு ஏற்ற இடம். இங்குள்ள காடுகளில் மூங்கிலும் பிரம்பும் அதிகம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, உள்ளது, தொலைவில், தமிழக, திருநெல்வேலி, tamilnadu, மாவட்டங்கள், பாளையங்கோட்டை, சந்தை, தென்காசியிலிருந்து, பெயர், தொழில், நல்லூர், அழைக்கப்படுகிறது, தகவல்கள், தமிழ்நாட்டுத், ஏற்ற, வியாபாரத்திற்கு, சித்த, கொண்டது, இடம், பெற்றது, | , tirunelveli, கடைய, கடையம், districts, இருக்கிறது, முதலியவை, நிறைய, தலைநகர், என்பதே, இராதாபுரம், இந்தியா, இதன், வழக்கம், information, கோவில்