திருநெல்வேலி - தமிழக மாவட்டங்கள்
பள்ளிகள் :
தொடக்கப்பள்ளிகள்-நடுநிலை-உயர்நிலை-மேல்நிலை-கல்லூரிகள்
1,460 411 90 129 14 இது தவிர தொழில் கல்வி நிறுவனங்கள்-3; அரசு
மருத்துவக் கல்லூரி; அரசு சித்த மருத்துவக் கல்லூரி;
தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7; தொழிற் நுட்பக் கல்லூரிகள் 5;
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-8.
மருத்துவம் :
மருத்துவ மனைகள்-10; மருந்தகம்-3; தொடக்க மருத்துவ நல நிலையம்
55; துணை தொ.ம.நலநிலையம்-385.
பெயர்க்காரணம் :
நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளிலேயே
'திருநெல்வேலி' என அழைக்கப்படுகிறது.
ஆற்றுவளம் :
மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல
சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத்
பெருக்கியுள்ளன.
தாமிரபரணி :
பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு,
களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது.
இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக்
காயல் என்னுமிடத்தில் மன்னார் குடாக் கடலுடன் கலக் கிறது.
தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த
ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ.
மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ
தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ
தான்.
சிற்றாறு :
இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால்
தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள்
பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக
உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு,
கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.
அணைகள் :
மணிமுத்தாறு அணை :
அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820
அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம்
கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன
நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி
பெறுகின்றன.
பாபநாசம் அணைகள் :
பாபநாசம் அணை |
ஸ்ரீமுகப்பேரி அணை :
தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
திருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருநெல்வேலி, நீளம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, பாபநாசம், இதன், பெறுகின்றன, அணைகள், நீர், தமிழ்நாட்டுத், தகவல்கள், மூலம், tirunelveli, நீரைத், districts, மேலணை, அணையின், தேக்கி, ஏக்கரும், | , அணையும், ஸ்ரீமுகப்பேரி, வாயிலாக, வரும், ஏக்கர், தென்காசி, கல்லூரி, மருத்துவ, மருத்துவக், அரசு, தவிர, நிறுவனங்கள், இங்கு, தாமிரபரணி, information, தான், பரப்பு, கல்வி, தொலைவிலுள்ள, கல்லூரிகள்