திருநெல்வேலி - தமிழக மாவட்டங்கள்
கோயில் பத்து :
சிவன் கோயிலின் கிழக்கே நின்று பார்த்தால் சுவரில் ஒரு கதவு தெரியும். அதைத் தள்ளி விட்டு அதனுள் பலர் நின்று கொள்ள முடியும்.
பழங்குடிகள் :
திருநெல்வேலி மாவட்டத்தில் பலியர், பளிஞர் காணியர் முதலியோர் உள்ளனர்.
பலியர் :
சங்கரன் கோயில் வட்டத்தில் வாசுதேவ நல்லூருக்கருகில் தலையணை என்னுமிடத்தில் வாழ்கின்றனர். குள்ள உருவமும் பரந்த தலை முடியையும் கொண்டவர்கள். தேனெடுத்தல், மான் வேட்டை இவர்களின் முக்கியத் தொழில்கள்.
பளிஞர் :
பொதிகை மலையில் கலியாண தீர்த்தத்துக்கு 16 கி.மீ அப்பால் இவர்களின் குடியிருப்பு உள்ளது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. சொக்கி என்ற குழல் கருவியை வாசிக்கின்றனர். மலையாளத் தமிழில் தமிழ் பேசுவது இவர்கள் மரபு.
காணியர் :
நெல்லை மாவட்டத்தில் 'காணியர்' பாபநாசம் கீழ் அணைக்கட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்து புகழ்பெற்ற பெருமக்கள் :
புதுமைப்பித்தன் |
கலை வளர்த்தோர் :
வாய்பாட்டு :
ஜி.கிட்டப்பா, ரெங்கம்மா, வி.வி.சடகோபன், சுந்தர மூர்த்தி ஒதுவார், ஹரிகேச முத்தையாபாகவதர்.
நாதசுரம் :
காருக்குறிச்சி அருணாசலம், ஐயாகுட்டிக் கம்பர், திருநெல்வேலி சின்ன சுப்பையா கம்பர்.
தொழிலதிபர்கள் :
டி.வி.எஸ். அய்யங்கார், என்பில்டு சுந்தரம் ஐயர், ஸ்பென்ஸர் அனந்தராம கிருஷ்ணன் - அடிசன் & எடிசன் நிறுவனம். இந்தியா சிமெண்ட்ஸ் சங்கரலிங்கம் அய்யர்.
வரலாற்றாசிரியர் :
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.
வெளியீட்டாளர் :
வ. சுப்பையாபிள்ளை. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரம்பரிய ஏற்றுமதி பொருள்கள் :
பனை ஓலை ஈர்க்கிலிருந்து செய்யப்படும் வலை கூடுகள் வெங்காயம் அழுகாமல் காப்பாற்றுகிறது. கப்பல்களில் விரிக்கக் கூடியதும், கசியாமல் பொருள்களை காப்பாற்றும் பனையோலை பாய்கள், கொச்சி, பம்பாய் துறை முகங்களுக்குச் செல்கின்றன. அமெரிக்காவில் சாலைகள் சுத்தம் செய்யப்பயன்படுத்தப்படும் பனைநார் மிகுதியாக இங்கிருந்து தான் ஏற்றுமதிசெய்யப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருநெல்வேலி, பிள்ளை, தமிழக, எழுதிய, tamilnadu, மாவட்டங்கள், காணியர், தமிழ்நாட்டுத், தகவல்கள், நெல்லை, | , இவர்கள், கவிராஜ, கம்பர், இவர்களின், புதுமைப்பித்தன், பெருமக்கள், பலியர், information, districts, tirunelveli, இந்தியா, கோயில், பளிஞர், மாவட்டத்தில், நின்று, வாழ்கின்றனர்