திருநெல்வேலி - தமிழக மாவட்டங்கள்
தலைவன் கோட்டை :
முள்ளிக் குளத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ளது. இங்கு முக்கிய விளை பொருள் தக்காளி, வெண்டைக்காய்.
திருமாலபுரம் :
சுற்றுலாத் தலம். கடைய நல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ளது. முற்கால பாண்டியர்கள் அமைத்த குடை வரைக் கோயிலில் பாண்டியர் கால ஓவியங்கள் உள்ளன. 45மீ உயரமுள்ள இம்மலையின் உச்சியில் ஊற்றும் கத்தோலிக்கத் கோயிலும் உண்டு.
புளியங்குடி :
பாம்புக் கோயில் இரயிலடியிலிருந்து 5கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு கைத்தறி வேட்டி சிறந்த பெயரைப் பெற்றுள்ளது. கருங்கண்ணி பருத்தி விளைச்சல் அதிகம்.
சேரன் மாதேவி :
திருநெல்வேலியிலிருந்து 26கி.மீ தொலைவில் உள்ளது. பழைய கோவில் உண்டு. இவ்வூரில் நெசவுத் தொழில், மண்பாண்டத் தொழில், கொழுந்து மலையில் மூலிகை எடுக்கும் தொழில், ஓடு செய்யும் தொழில், உரத்தொழில் இவற்றுடன் வேளாண்மையும் சிறந்து விளங்குகிறது.
குருவிக்குளம் :
இங்கு பருத்தி, கம்பு, வாழை ஆகியவை முக்கியமானவை. கதர் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. குயவர், கம்மார் கூட்டுறவு முறையில் சிறந்த பயனைப் பெற்றுள்ளனர்.
வன்னிக்கோநேந்தல் :
பழத் தோட்டங்கள் அதிகம். குறிப்பாக எலுமிச்சை.
வாசுதேவ நல்லூர் :
புளியங்குடிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. புலித்தேவரின் கோட்டை இருந்து அழிவுற்றது. ஊரருகே அடர்த்தியான காடு இருக்கிறது.
சிவகிரி :
குற்றாலம் செல்லும் சாலையில் உள்ளது. நெல்விளையும் வளமான ஊர். 'குட்டி மலையாளம்' என்று அழைப்பார்கள். இங்கு மாம்பழ விளைச்சல் அதிகம். சிவகிரிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. திருநெல்வேலியிலிருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ளது. பீடித்தொழில், லித்தோ அச்சகங்கள் உள்ளன. 'முக்கூடற்பள்ளு' என்ற புகழ்பெற்ற பள்ளு இலக்கியம் இவ்வூரைப் பற்றிப் பேசுகிறது.
செண்பகராமன் நல்லூர் :
நாங்குநேரிக்குக் கிழக்கே ஆறு கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர். இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் வெளிப் பிரகாரத்தின் வடக்கு வரிசையில், வடக்குத் தூணில் இரு துவாரங்கள் உள்ளன. ஒன்றில் ஊதினால் எக்காள ஒலியும், மற்றொன்றில் சங்கொலியும் கேட்கும் வண்ணம் செய்துள்ளனர்.
கருவேலங்குளம் :
களக்காட்டிலிருந்து 1 1/2 கி.மீ தொலைவிலுள்ளது. புகழ்பெற்ற நடராசர் உருவம் இக்கோயில் உள்ளது. ஏழிசையும் ஒலிக்கும் தூண்கள் இங்குண்டு. மகாமண்டபத்தில் உள்ள கனமற்ற விநாயகரைத் தூக்கினால் கீழே ஓர் அறையைக் காணலாம்.
பிரம்ம தேசம் :
ஊரின் நடுவில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்குக் கல்லினால் அமைந்த கூரையும், நான்கு கண்ணிகளுடன் கூடிய கற்சங்கிலியில் தொங்கும் கல்மணியும், ஒரு பாதி யானையாகவும், ஒரு பாதி சிங்கமாகவும் உள்ள பெரிய யாளியின் வாயில் உருளும் கல்லுருண்டை வெளியே எடுக்கமுடியாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரு குரங்குகளின் உருவங்கள் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வேலி - Tirunelveli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தொலைவில், திருநெல்வேலி, இங்கு, tamilnadu, தொழில், தமிழக, மாவட்டங்கள், அதிகம், தொலைவிலுள்ளது, தகவல்கள், தமிழ்நாட்டுத், பாதி, விளங்குகிறது, சிறந்து, | , தோட்டங்கள், நல்லூர், உள்ள, புகழ்பெற்ற, மலையில், மேற்கே, சிறந்த, information, districts, tirunelveli, கோட்டை, உண்டு, திருநெல்வேலியிலிருந்து, விளைச்சல், பருத்தி, கோவில்