திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
வழிப்பாட்டுத் தலங்கள் :
பழனி மலை மீதுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் எப்போது ஏற்பட்டது என்பதை அறுதியிட்டு கூற முடியவில்லை. இக்கோயிலில் உள்ள திருவுருவம் கல்லால் ஆனதன்று. 81 வகையான பாஷாண மருந்துகளை உருக்கி வேகவைத்து அவற்றைக் கலந்து திருவுருவம் செய்யப்பட்டுள்ளது. பெரும் ஞானியும், மேதையும், சித்தருமான போகர் என்பவரால் இத்திருவுருவம் செய்யப்பட்டது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாலும், தயிரும், தண்ணீரும், தேனும், சந்தனமும் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டும் அதைத் இத்திருவுருவம் இதுகாலம் தாங்கி நிற்பது வியக்கத்தக்கதாகும். 1900 ஆம் ஆண்டுக்குப் பிறகே இக்கோயில் புகழ்பெறத் தொடங்கியது. காலை 5 மணிக்கு விசுவரூப பூசை, இரவு 8 மணிக்கு ராக்கால பூஜை, இறைவன் பள்ளி யறைக்குச் செல்வது, தங்கரதம் முதலியன பார்க்கத் தக்கன. பழனி பஞ்சாமிர்தமும், திருநீறும் மிகுதியாகப் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக வருமானம் பெறும் திருக்கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலின் சராசரி ஆண்டு வருமானம்
தண்டாயுதபாணி சுவாமி கோயில் |
இக்கோயிலின் சமுதாய நலப் பணிகளாகப் பின்வரும் கல்வி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக்கல்லூரி, பெண்கள் கலைக் கல்லூரி, ஆண்கள் பாலிடெக்னிக், பெண்கள் பாலிடெக்னிக், மெட்ரிகுலேசன் பள்ளி, தமிழ் போதானா முறைப்பள்ளி, செவிடர்-ஊமையர் பள்ளி, அன்பு இல்லம், பாலர் காப்பகம், நாதஸ்வரப் பள்ளி, தவில் பள்ளி, வேத சிவாகம பாடசாலை மற்றும் மருத்துவமனை, சித்த வைத்திய சாலை, நூலகம், சிறுகுடில்கள், சத்திரங்கள் முதலியன.
பெரிய நாயகி அம்மன் கோயில் :
பழனி நகருக்குள் உள்ள இக்கோயிலை ஊர்க்கோயில் என்றழைப்பர். இதில் உள்ள பல கோயில்களின் வாகனங்கள் காணத்தக்கது.
வரதராஜப் பெருமாள் கோயில் :
நாயக்க மரபினரான பாலசமுத்திரம் ஜமீன்தார்கள் 17ஆம் நூ ற்றாண்டில் இக்கோயிலைக் கட்டினர். இக்கோயில் சிற்பச் சிறப்புடையது.
செளந்தரராசப் பெருமாள் கோயில் :
செளந்தரராசப் பெருமாள் கோயில் |
மல்லீஸ்வரர் கோயில் :
ரங்க மலையில் உள்ள மலையுச்சிக்கு சற்றுக் கீழே இந்த சிவன் கோயில் இருக்கிறது. இக்கோயில் மிகப் பழமையானது. பாட்டியர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. கோயில் சற்றுப் பெரியது. நாள்தோறும் ஏராளமானோர் மலையேறி சுவாமியைத் தரிசித்துத் திரும்புகிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோயில், இக்கோயில், பள்ளி, பெருமாள், உள்ள, திண்டுக்கல், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, இக்கோயிலில், இக்கோயிலின், சுவாமி, தமிழ்நாட்டுத், பழனி, தகவல்கள், சிற்பங்கள், ஆண்கள், இதில், | , பெண்கள், செளந்தரராசப், பெரிய, பாலிடெக்னிக், நாயக்க, கட்டப்பட்ட, ஆயிரம், அருள்மிகு, information, districts, dindigul, தண்டாயுதபாணி, திருவுருவம், முதலியன, மணிக்கு, இத்திருவுருவம், கல்லால், வருமானம்