திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
பூட்டுத் தொழிலைக் கொண்டு தென்னிந்தியாவின் அலிகார் எனப் புகழ்
பெற்றது திண்டுக்கல். விதவிதமான நவீன
பூட்டுகள் சந்தைக்கு வந்து விட்டாலும், திண்டுக் கல்லிலும்,
திண்டுக்கல்லை அடுத்துள்ள நல்லாம்பட்டி, யாகப்பன்பட்டி,
பாறைப்பட்டி, புதூர், அனுமந்த நகர் என்று பல பகுதிகளிலும் பூட்டுத்
தயாரிப்பது ஒரு குடிசைத் தொழிலாக நடைபெறுகிறது. இங்கு ஆறிலிருந்து
எட்டு லீவர்கள் வரை உள்ள மாங்காய் பூட்டுகள் பிரசித்தம். அதில்
பக்கவாட்டில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் தான் திறக்க
முடியும். மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுர சைஸ் பூட்டு,
அலமாரிப் பூட்டு, டிராயர் பூட்டு என்று பல விதமான பூட்டுகள்
தயாராகின்றன.
இதில் கதவுடன் பொருத்தக் கூடிய மணிப்பூட்டு இங்கு மட்டுமே தயாராகிறது. எட்டு இன்சு வரை உள்ள இந்தப் பூட்டு ஒவ்வொரு முறை சாவியைச் சுழற்றும் போதும் மணிச்சத்தம் வரும் ஐந்திலிருந்து பத்துமுறை மணியடிக்கும் பூட்டுகளும் உண்டு பித்தளைப் பூட்டுகளும், குரோமியப் பூச்சுப் பூசின பூட்டுகளும் அதிகம் விற்பனை யாகின்றன. இப்பூட்டுகள் இங்கு வரிசையாக உள்ள மொத்த விற்பனைக் கடைகளி லிருந்து தமிழகம் முழுவதற்கும் கேரளாவிற்கும் வினியோகமாகின்றன. அரசினரின் பூட்டுத் தொழிற்சாலை ஒன்று 1857 முதல் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் பூட்டு |
சிங்கப்பூர் இலங்கை வரை பிரபலமாகியிருந்த திண்டுக்கல் பூட்டுகளும் இரும்புப் பெட்டிகளும் தற்போது வியாபாரப் போட்டிகள் அதிகமாகிப் போனதில் சற்றுப் பின் தங்கி இத்தொழில் நசிந்து வருகிறது. திண்டுக்கல்லில் திங்கள் கிழமைதோறும் சந்தை கூடும். இங்கிருந்து பழனி 60 கி.மீ. கொடைக்கானல் 96 கி.மீ. கொடைரோடு 22 கி.மீ மதுரை 65 கி.மீ. திருச்சி 96 கி.மீ.
நிலக்கோட்டை :
இது வட்டத்தலைநகராய் விளங்குகிறது. பழைய திண்டுக்கல் சீமையில் 26 பாளை யங்களும் இது ஒன்றாய்த் திகழ்ந்தது. இங்கு இடிபாடுகளுடன் காணப்படும் கோட்டை கூளப்ப நாய்க்கன் கோட்டை எனப்படுகிறது. இங்குள்ள அகோபில நரசிம்மர் கோயில் கூளப்பநாய்க்கன் பின்னோர்கள் கட்டியது. தொடர்ந்து மூன்றாண்டுகள் வெள்ளையரை எதிர்த்த பெருமை இப்பாளையக்காரர்களுக்கு உண்டு.
அம்மைய நாயக்கனுர் :
நிலக்கோட்டையிலிருந்து 6 கி.மீ கிழக்கேயும் மதுரையிலிருந்து 42 கி.மீ தொலைவிலும் இவ்வூர் உள்ளது. இங்கிருந்து பூ, திராட்சை, தக்காளி முதலியன ஏற்றுமதியாகின்றன. கேழ்வரகு, சோளம், கடலை முதலியன செம்மண் பகுதிகளில் பயிராகின்றன. 1736 இல் இவ்வூரில் நடைபெற்ற போரினால் நாயக்கர் ஆட்சிக்கும், சந்தா சாகிப்பின் வீழ்ச்சிக்கும் வழி ஏற்பட்டது.
அம்மாப்பட்டி :
கிறிஸ்துவர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இங்கு அமெரிக்க மிஷனும், தென்னிந்திய திருச்சபையும் செயல்படுகின்றன.
காட்டு நாயக்கன்பட்டி :
இவ்வூரில் வாழும் தொட்டிய நாயக்கர்கள் கிராமியக் கலையில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் தேவராட்டம், சேவையாட்டம் முதலிய கலைகளில் சிறந்து விளங்குகின்றனர். ராமர்கதை, பாரதக்கதை முதலியவற்றை தெலுங்கிலும் தமிழிலும் சொல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் செண்பகராயப் பெருமாள் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். மேட்டுப்பட்டியில் சித்தர்மலையும், ஊர் எல்லையிலுள்ள பேரணையும், பஞ்சபாண்டவர் பாதமும், கன்னிமார் கோயிலும் காணத்தக்கவை.
வத்தலகுண்டு :
சிறுநகரமான இது நிலக்கோட்டைக்கு மேற்கே 11 கி.மீ தொலைவிலுள்ளது. மஞ்சளாறு வேளாண்மைக்கு உறுதுணையாக உள்ளது. தரமான அரிசிக்கு வத்தலகுண்டு பெயர் பெற்றது. மற்றும் வாழை, தென்னை, தக்காளி ஆகியன இவ்வூரில் பயிராகின்றன. வெற்றிலை மிகுதியாக பயிரிடப்பட்டு, பெரிய அளவில் ஏற்றுமதியாகிறது. வெற்றிலைக் குண்டு என்பது வத்தலகுண்டு என்று வழங்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இங்கு, பூட்டு, பூட்டுத், உள்ள, பூட்டுகளும், தமிழக, tamilnadu, மாவட்டங்கள், வத்தலகுண்டு, தமிழ்நாட்டுத், இவ்வூரில், தகவல்கள், பூட்டுகள், மிகுதியாக, கோட்டை, உள்ளது, இங்கிருந்து, முதலியன, ஆகியன, பயிராகின்றன, | , தக்காளி, இரும்புப், எட்டு, பெற்றது, districts, information, தயாராகின்றன, dindigul, அளவில், பெட்டிகள், வருகிறது, உண்டு, பெரிய