திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் பல ஊர்களுக்கும்
அனுப்பப்படுகிறது. இங்குள்ள சித்தனாதன் பரிமளவிலாஸ் நான்கு
தலைமுறைகளாக பஞ்சாமிர்த தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
வாழைப்பழம், சர்க்கரை, பேரீச்சம்பழம், தேன், கற்கண்டு, கிஸ்மிப்
பழம், நெய், ஏலாக்காய் இவற்றைக் கலந்து பஞ்சாமிர்தம்
தயாரிக்கிறார்கள் தினசரி 300 கிலோ பஞ்சாமிர்தம் இவர்கள் விற்பனை
செய்கிறார்கள். பங்குனி உத்திர சீசனில் விடிய விடிய நடக்கும்
வியாபாரத்தில் ஒரே நாளில் 5000 கிலோ பஞ்சாமிர்தம் விற்பதாக
சொல்கிறார்கள். இது தவிர, தமிழ்நாட்டில் கோவில் தேவஸ்தானமே
பஞ்சாமிர்தத் தயாரிப்பில் இறங்கியிருப்பது பழனியில் மட்டுமே.
முப்பது உருவங் களாகவே மலையின் மேல்பகுதியில் கோவிலை ஒட்டி
பஞ்சாமிர்தத் தயாரிப்பு வேலை கள் நடக்கின்றன. முன்பு கைகளினால்
தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் தற்போது மிஷினில்
தயாரிக்கிறார்கள். பஞ்சாமிர்த கலவை விகிதத்தை ரகசியமாக வைத்திருக்
கிறார்கள். வருடத்திற்கு 75 இலட்சம் பக்தர்கள் வரை பழனி முருகனை
தரிசிக்க வருவதால், தேவஸ்தானத்திலேயே ஆண்டுதோறும் ஏறத்தாழ
ஒண்ணேகால் கோடி ரூபாயிற்கு பஞ்சாமிர்த விற்பனை நடக்கிறது. பழனி
பஞ்சாமிர்தமும் திருநீறும் பல ஊர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
திண்டுக்கல் நகரம் :
திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகராய் இது விளங்குகிறது. இருபெரும் தேசிய
நெடுஞ்சாலைகள் இங்கு இணைகின்றன. கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் இவ்வூரருகே சந்திக்கின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் செல்லுகின்றன. டவுன்பஸ் வசதியும் மிகுதி. திருச்சி-மதுரை, திண்டுக்கல்-பாலக்காடு, திண்டுக்கல்-கோயம்புத்தூர் இரயில் பாதைகள் சந்திக்கும் இடமாக திண்டுக்கல் விளங்குகிறது.
சிறுமலையின் அடிவாரம் 11 கி.மீ தொலைவில் உள்ளதாலும், கொடைக்கானல் 25கி.மீ தொலைவில் உள்ளதாலும் திண்டுக்கல்லில் வெப்பத்தின் தாக்கம் தெரிவதில்லை. ஆனால் இங்கு போதிய அளவு மழை பெய்வதில்லை. நகரைச் சுற்றி தாழ்வான மலைகளே சூழ்ந்திருக்கின்றன. மலைக்கோட்டை மீது நடந்து சென்றால் சுகமான காற்றை அனுபவிக்கலாம்.
திண்டு கல் |
ஆந்திராவிலிருந்து வரும் சாத்துக்குடி ஆரஞ்சுப் பழத்துக்கும் திண்டுக்கல்லே தலைச் சிறந்த விற்பனையிடம். சிறுமலை வாழைப்பழமும் மிகுதி. தெற்கேயுள்ள பல ஊர் களுக்கும் இங்கிருந்துதான் பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
1866 இல் திண்டுக்கல் நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. முஸ்லீம்களும், கிறிஸ்து வர்களும் பெரும்தொகையினராக இங்கு வாழ்கின்றனர். இரண்டுக் கல்லூரிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், தொழிற்பள்ளி இவற்றுடன் காந்திக்கிராமத்தில் உள்ள கல்வி நிலையங்களும் கல்விப் பணியாற்றி வருகின்றன.
திண்டுக்கல்லில் சிவன் கோயில்களும், பெருமாள் கோவில்களும் உள்ளன. இராமலிங்க சுவாமி கோயிலும் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாரியம்மன் திருவிழாவில் தீச்சட்டி ஏந்துவதும், சுற்றுவதும் சிறப்பாக நடைபெறும். 1729 இல் கட்டப்பட்ட 'சர்ச் ஆப் அவர் லேடி ஆப் டோலர்ஸ்' மற்றும் 1872 இல் கட்டப்பட்ட 'புனித ஜோசப் சர்ச்' ஆகியன குறிப்பிடத்தக்க கிறிஸ்துவ தேவாலயங்கள். கரூர் சாலையில் பெஸ்கி பாதிரியார் பெயரால் இயேசு சபையாரின் கல்வி நிலையம் உள்ளது.
தொழில் வளம் நிறைந்த திண்டுக்கல்லில் பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சுருட்டுச் சுற்றுதல் சிறப்புத் தொழிலாக நடைபெறுகிறது. கேரளத்திற்குப் பெரிய அளவில் வாசனைப் புகையிலை ஏற்றுமதியாகிறது. இங்குள்ள புகையிலைத் தொழிற் சாலைகளில் குறிப்பிடத்தக்கது ஸ்பென்சர் கம்பெனி.
நூல் ஆலைகள், பருத்திக் கொட்டையை நீக்கிப் பஞ்சு எடுக்கும் ஆலைகள், கடலைஎண்ணெய் ஆலைகள், தோல் பதனிடுதல், தோல் செருப்புகள் தயாரித்தல் முதலியன முக்கியப் பெரும் தொழில்களாக நடைபெறுகின்றன. ஜரிகை வியாபாரத்திற்கும் திண்டுக்கல் பிரசித்திப் பெற்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், திண்டுக்கல்லில், பஞ்சாமிர்தம், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, இங்கு, விளங்குகிறது, பஞ்சாமிர்த, இங்குள்ள, பழனி, தமிழ்நாட்டுத், ஆலைகள், தகவல்கள், பெரிய, பெற்றது, உள்ளதாலும், புகையிலை, திண்டு, கல்வி, சர்ச், தோல், | , கட்டப்பட்ட, தொலைவில், வருகின்றன, ஏற்றுமதியாகிறது, விற்பனைக்கு, மலையின், ஊர்களுக்கும், அனுப்பப்படுகிறது, தயாரிப்பில், கோவில், information, dindigul, districts, தயாரிக்கிறார்கள், கிலோ, மலையும், இங்கிருந்து, தொடர்ச்சி, பஞ்சாமிர்தத், விற்பனை, விடிய, மிகுதி