திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
கொடைக்கானலில் கணக்கற்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
இவற்றில் முக்கியமானது சில்வர் கேஸ்கேடு (Silver Cascade) நீர்வீழ்ச்சியாகும். இதுவும்,
எரி, ஃபெய்ரி நீர்வீழ்ச்சி (Fairy Falls) க்ளென் நீர்வீழ்ச்சி (Glen Falls) பிரீஸ்ட் வாக் (Priests walk) பகுதி போன்ற இடங்களும் சிறந்த முறையில் பேணப்பட்டு
வருகின்றன. தனியார் துறையின ராலும், தமிழ்நாடு சுற்றுலா
வாரியத்தாலும் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
சில்வர் கேஸ்கேடு |
கொடைக்கானல் மலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சிப்பூ பூக்கிறது. இதனால் தமிழ் இலக்கியத்தில் இவ்வூர் குறிஞ்சி மலை எனக் குறிப்பிடப் படுகிறது. இது செப்டம்பர் முதல் மார்ச் வரை பூக்கிறது. மூன்றடி உயரத்திற்கு வளரும் பூவால் கொடைக்கானல் மலைப்பகுதி கண்கவர் காட்சியாய் விளங்கும். இது 4500 முதல் 6000 அடி வரை உயரமுள்ள மலைப்பகுதியில் பூக்கும். அப்போது தாவரவியல் அறிஞர்கள் பலர் வருகை தந்து பயனுறுவர்.
கொடைக்கானல் பகுதியின் உயர்ந்த மலைகளில் காப்பியும், கோகோவும், கோதுமை யும், பார்லியும், வெள்ளைப்பூண்டும், வால்பேரியும், சர்க்கரைப் பேரியும், இங்கிலிஷ் காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன. தாழ்ந்த மலைப்பகுதிகளில் உயரின வாழை, காப்பி, ஏலம், இஞ்சி, மஞ்சள் முதலியன பயிராகின்றன. பழ வகைகளும் மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, பிளம், கொடித் திராட்சை, ஆப்பிள், செர்ரி ஆகியன பயிராகின்றன. மலைச்சரிவுகளில் நெல் சாகுபடி நடக்கிறது.
இம்மலையில் குன்னுவர், புலையர், பளியர், முதுவர், மண்ணாடியர் முதலிய இனத்தவர் கள் வாழுகின்றனர். கி.பி. இரண்டாம் நூ ற்றாண்டுக்கு முற்பட்ட சங்க நூ ல்களில் கோடை மலையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
பழனி நகரம் :
பழனி முதல்நிலை நகராட்சியாக விளங்குகிறது. பழனிமலைத் தொடர்களின் அடிவாரத்தி லிருந்து 10கி.மீ தொலைவிலும், கடல் மட்டத்திற்கும் மேல் 350 மீட்டர் உயரத்திலும் இந்த நகரம் அமைந்துள்ளது. இருபது சதுர கி.மீ பரப்புக்கு மலைகளையும் குன்றுகளை யும், ஆறுகளையும் காணலாம். இரயில் நிலையம், பேருந்து வசதி சிறப்பாக உள்ளன. பல்லாயிரம் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிகின்றன காரணத்தால் தமிழ்நாட்டிலேயே வருவாய் மிகுந்த கோயிலாகப் பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது.
பழனி தண்டாயுதபாணி |
இவ்வூரின் பழம்பதி எனச் சொல்லத்தக்கது திருவாவினன்குடி. திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் திருவாவினன் குடிக் கோயிலைப் பாடியுள்ளார். இது ஆறுபடை வீடுகளில் மூன்றாவதாக வைத்துப் போற்றப்படுகிறது. சக்தி மலையில் இடும்பன் கோயில் உண்டு. மலையின் உயரம் 485 அடி. 480அடி உயரமுள்ள சிவகிரி மலையில் புகழ்பெற்ற தண்டாயுதபாணி கோயில் அருள்புரிகிறது. இதன் உச்சியைப் படிகள் வழியாகவும், ஒற்றையடிப்பாதை வழியாகவும், தொங்குபால மின்னுர்தி வாயிலாகவும் சென்றடையலாம். இம்மலை இரண்டு கி.மீ தொலைவிருக்கும். இம்மலையிலிருந்து வீசும் சஞ்சீவிக் காற்று பல நோய்களைக் குணமாக்குகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - பழனி, திண்டுக்கல், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, ஊற்று, தண்டாயுதபாணி, மலையில், பழம், கொடைக்கானல், பழனியில், தமிழ்நாட்டுத், விழா, தகவல்கள், | , வழியாகவும், பயிராகின்றன, முதலியன, யும், வருகை, நகரம், முருகனை, கோயில், விளங்குகிறது, பல்வேறு, தொழில்களும், நிலையம், கேஸ்கேடு, நீர்வீழ்ச்சி, சில்வர், information, dindigul, districts, falls, போன்ற, பூக்கிறது, இவ்வூர், வசதி, மதுரை, சுற்றுலா, கொடைக்கானலுக்கு, உயரமுள்ள