திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | திண்டுக்கல் |
பரப்பு : | 6,036 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 2,159,775 (2011) |
எழுத்தறிவு : | 1,481,834 (76.26%) |
ஆண்கள் : | 1,080,938 |
பெண்கள் : | 1,078,837 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 358 |
வரலாறு :
திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும் (காண்க : மதுரை மாவட்டம்)
திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல் கோட்டைதான். மலை மீது பாண்டியர் காலத்துக் கட்டிடக் கலைச் சிறப்புக் கொண்ட ஒரு கோயில் இருக்கிறது. 1605 இல் மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் மலைக்குத் தென்கிழக்கில் மேற்கண்ட கோட்டையை கட்டினார். திப்புசுல்தான் ஆட்சியின் கீழ் இருந்தபோது, திண்டுக்கல் கோட்டை விரிவாக்கப்பட்டு, பழைய வாயில்கள் மாற்றப் பட்டு புதிய வாயில்கள் அமைக்கப்பட்டன. 1798இல் ஆங்கிலேயர், கோட்டையில் மேலும் சில கட்டிடங்களைக் கட்டினர். 1947 வரையில் இக்கோட்டை ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்தது. சுமார் 157 ஆண்டுகள் அவர்கள் வசமிருந்தது. மதுரை மாவட்டத்தில், முதன் முதலாக ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்த பகுதி திண்டுக்கல்தான்.
எல்லைகள் :
திண்டுக்கல் மாவட்டம் வடக்கில் கரூர், ஈரோடு மாவட்டங்களையும், கிழக்கில் திருச்சி, மதுரை மாவட்டங்களையும் தெற்கில் மதுரை, தேனி மாவட்டங்களையும், மேற்கில் கோயமுத்தூர் மாவட்டத்தையும் கேரள மாநிலத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் திண்டுக்கல் ஆகும்.
வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-4 (திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம்);
ஊராட்சி ஒன்றியங்கள்-14 (திண்டுக்கல், சாணார் பட்டி, நத்தம், ஆத்தூர்(இருப்பு), செம்பட்டி, ரெட்டியார்சத்திரம்,நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, பழனி, ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி, கொடைக்கானல்);
பேரூராட்சி-24 (அம்மைநாயக்கனுர், அய்யம்பாளையம், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி, அகரம், பட்டிவீரன்பட்டி, தாடிக்கொம்பு, சித்தயன்கோட்டை, ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, சேவுகம்பட்டி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பாலசமுத்திரம் பாளையம், நெய்க்காரப்பட்டி, கீரனுர், வடமதுரை, அய்யலூர், எரியோடு, பண்ணைக்காடு);
கிராமங்கள்- 358.
சட்டசபைத் தொகுதிகள் :
8-பழனி, ஒட்டன் சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர், பெரியகுளம் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதி மட்டும்).
பாரளுமன்றத் தொகுதிகள் :
3-திண்டுக்கல், பழனி, பெரியகுளம் (கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப்பகுதி மட்டும்).
கல்வி :
பள்ளிகள்: துவக்கநிலை-1,133; நடுநிலை-216; உயர்நிலை-55; மேனிலை-36; கல்லூரிகள்-9; (அரசு மற்றும் தனியார்) பொறியியல் கல்லூரிகள்-2; தொழில்பயிற்சி நிறுவனங்கள்-3; தொழிற்நுட்பக் கல்லூரிகள்-4; பல்கலைக் கழகம்-2; (காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக் கழகம்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், மதுரை, பழனி, கொடைக்கானல், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், ஊராட்சி, தமிழ்நாட்டுத், நத்தம், மாவட்டம், தகவல்கள், மாவட்டங்களையும், கல்லூரிகள், வத்தலக்குண்டு, மட்டும், கழகம், | , பல்கலைக், பெரியகுளம், தொகுதிகள், வடமதுரை, பகுதி, மக்கள், information, districts, dindigul, பாண்டியர், மன்னர்கள், வாயில்கள், கோட்டை, ஆங்கிலேயர், ஆத்தூர்