விலங்கியல் :: உணவும் ஊட்டமும்

81. வளர்சிதைமாற்றம் என்றால் என்ன?
ஒர் அடிப்படை வேதிமாற்றம். வளர்மாற்றம் சிதைமாற்றம் என்னும் இரு நிலைகளைக் கொண்டது. இத்தாலிய மருத்துவர் சேங்டோரியவ் (156-1636) வளர்சிதை மாற்றத்தை நன்கு ஆராய்ந்தவர்.
82. அடிப்படை வளர்சிதைமாற்றம் என்றால் என்ன?
உடலில் உயிர் நிலைத்திருப்பதற்கு வேண்டிய வளர்சிதை மாற்றம்.
83. வளர்மாற்றம் என்றால் என்ன?
வளர்சிதை மாற்றத்தின் ஆக்க நிலை. இதில் திசுக்கள் முன்கணியத்தில் உண்டாக்கப்படுகின்றன. எ-டு தன்வய மாதல், அதாவது செரித்து உறிஞ்சப்பட்டஉணவு திகவாக மாறுதல்.
84. சிதைமாற்றம் என்றால் என்ன?
வளர்சிதை மாற்றத்தின் சிதைவுப்பகுதி. இதில் அரிய பொருள்கள் எளிய பொருள்கள் ஆகும். உயிர் வேலை செய்ய ஆற்றல் கிடைக்கும். எ-டு ஆக்ஸிஜன் ஏற்றம். இச்செயல் திசுக்களில் நடைபெறுவது.
85. பாதுகாப்புப் பொருள்கள் யாவை?
உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க உதவுபவை. ஊறுகாயில் உப்பு, கடுகு எண்ணெய் முதலியவை சேர்க்கப்படும். இறந்த விலங்குகளையும் தாவரங்களையும் பாதுகாக்கப் பார்மலின் பயன்படுகிறது.
3. ஊட்டம்
86. ஊட்டம் என்றால் என்ன?
உயிர்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருள்களிலிருந்து அவற்றைப் பெறும் முறை.
87. ஊட்டத்தின் பயன்கள் யாவை?
1. உடல் வளர்ச்சிக்கும் உடலைப்பழுதுபார்ப்பதற்கும் இது தேவை.
2. நல்ல ஊட்டம் நல்ல உடல் நலத்தை அளிப்பது.
88. வடிகட்டி உணவுக் கொள்ளல் என்றால் என்ன?
நீரில் வாழும் விலங்குகள் உணவு கொள்ளும் முறைகளில் ஒன்று. எ-டு திமிங்கிலம்.
89. முழு விலங்கு ஊட்டம் என்றால் என்ன?
பெரும்பாலான விலங்குகளில் இது உண்டு. இதில் உட்கொள்ளல், விழுங்குதல், செரித்தல், உட்கவர்தல், தன்வயமாதல், வெளியேற்றல் என்னும் செயல்கள் நடைபெறும்.
90. தன்விழுங்கள் என்றால் என்ன?
தற்செரிமானம். ஓர் உயிரியின் குறிப்பிட்ட கண்ணறை கள் மிகையாக உள்ள அல்லது சிதைந்த கண்ணறை உறுப்புகளைச் செரிக்க வைத்தல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஊட்டம், வளர்சிதை, பொருள்கள், உயிர், இதில்