விலங்கியல் :: உணவும் ஊட்டமும்
71. பயனுறு அமினோகாடிகள் யாவை?
போதிய அளவு ஒர் உயிரில் தொகுக்க இயலாதவை. இவை புரதத் தொகுப்பிற்கு இன்றியமையாதவை. இவை 8. எ டு. அர்ஜினைன், லைசின்.
72. உடலில் தொகுக்கப்படும் பயனுறாக்காடிகள் எத்தனை?
பயனுறாஅமினோகாடிகள் 12
73. நார்ப்புரதம் (கொல்லேஜன்) என்றால் என்ன?
இணைப்புத்திசுவிலுள்ள நார் போன்ற புரதம். எலும்புப் பசையாக மாறுவது. தோல், தசைநார், எலும்பு முதலியவற்றிலுள்ள முதன்மையான புரதம்.
74. ஜி. புரதங்கள் என்பவை யாவை?
இவை இயற்கைப்புரதங்கள்.இவற்றை டாக்டர் ஆல்பிரட் ஜி. கில்மன், டாக்டர் மார்டின் ஏரிட்பெல் ஆகிய இரு அமெரிக்கக் அறிவியலார் கண்டுபிடித்தனர். 1994 இல் உடலியல் மருத்துவத்துறைக்குரிய நோபல்பரிசை இவ்விருவரும் பெற்றனர்.
75. 1994 ஆம் ஆண்டின் மூலக்கூறு எனச் சிறப்பிக்கப்பட்டது எது?
புரதக்குடும்பம். இது நம் நிறப்புரிகளின் வேதி ஒழுங்கு பாட்டை காப்பது. டிஎன்ஏ தொடர் நெடுகச் செல்வது.
76. சேப்பிரான்கள் என்பவை யாவை?
சிறப்பு மூலக்கூறுகள். இவை மடியும் வரை புதிதாகத் தோன்றும் புரதங்களைப் பாதுகாப்பவை.
77. கொழுப்புகள் என்பவை யாவை?
கரி, அய்டிரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்று தனிமங்களையுங் கொண்ட கரிமச் சேர்மங்கள். எ-டு எண்ணெய், நெய். உடலுக்கு வெப்பத்தையும் ஆற்றலையும் அளிப்பவை.
78. கொழுப்புப் பன்மச் சர்க்கரைடு என்றால் என்ன?
இது புற்று நோயைத் தடுக்கும் புதிய பொருள் உயிரணுவில் உள்ளது. இதை ஜப்பானிய அறிவியலார் கண்டு பிடித்துள்ளனர். (1994)
79. பயனுறு கொழுப்புகாடிகள் யாவை?
உணவில் இயல்பாக இருக்க வேண்டியவை. எ.டு. லினோ லிகக் காடி
80. பயனுறுஎண்ணெய் என்றால் என்ன?
மணமுள்ள இயற்கை எண்ணெய். எ-டு. நாரத்தை எண்ணெய், கிராம்பு எண்ணெய், பூ எண்ணெய்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, எண்ணெய், என்பவை, என்ன, என்றால்