விலங்கியல் :: உணவும் ஊட்டமும்
![Food and Nutrition](images/food_and_nutrition.jpg)
61. உணவின் ஆறுபகுதிகள் யாவை?
மாப்பொருள், புரதம், கொழுப்பு, நீர், தாது உப்புகள், வைட்டமின்
62. சமன் செய்த உணவின் வேலைகள் யாவை?
1. உடலுக்கு வளர்ச்சி அளிக்கிறது.
2. உடலுக்கு வெப்பம் தந்து, உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைக்கிறது.
3. வேலை செய்ய ஆற்றலைத் தருகிறது.
4. உடலின் அழிவு தேய்வுகளை ஈடுசெய்கிறது.
63. உணவில் நஞ்சு கலத்தல் என்றால் என்ன?
உணவில் தீங்கு தரும் உயிரிகளின் நஞ்சு சேர்ந்து தொல்லை தருதல். பல்லி உணவில் விழுதல்.
64. பால் என்பது என்ன?
இது ஒரு நிறைவுணவு. எல்லா வைட்டமின்களும் மற்ற உணவின் பகுதிகளும் உள்ளன.
65. மாப்பொருள் என்றால் என்ன?
உணவின் ஆறு பகுதிப் பொருள்களில் ஒன்று. ஸ்டார்ச்சும் சர்க்கரையும் சேர்ந்தது. ஆற்றலைத் தருவது.
66. புரதம் என்பது யாது?
ஒரு கரிமச் சேர்மம். அமினோகாடிகளாலானது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. பருப்பிலும் இறைச்சியிலும் அதிகம்.
67. புரதத்தொகுப்பு என்றால் என்ன?
பகுதி உறுப்பான அமினோகாடிகளிலிருந்து உயிரணுக்கள் புரதம் உருவாக்கும் முறை. இதைக் கட்டுப்படுத்துவது டிஎன்ஏ.
68. புரதப்பகுப்பு என்றால் என்ன?
புரதங்களை அமினோகாடிகளாக நீரால் பகுத்தல்.
69. அமினோகாடிகள் என்றால் என்ன?
உயிர் வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையா வேதிப்பொருள்கள்.
70. இவற்றின் எண்ணிக்கை எத்தனை?
மொத்தம் 20. பயனுள்ளவை 10. பயன் குறைந்தவை 10.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், உணவின், உணவில், புரதம்