விலங்கியல் :: உணவும் ஊட்டமும்
101. ஒம்புயிர் என்றால் என்ன?
ஒட்டுண்ணி வாழ இடமளிக்கும் உயிரி. இது இருவகை.
1. திட்ட ஒம்பி - புகையிலை
2. இடைநிலை ஒம்பி – அனோபிலஸ் கொசு.
102. ஊனுண்ணி என்றால் என்ன?
உயிரின் சதையை உண்ணும் விலங்கு. எ-டு சிங்கம், புலி.
103. தாவர உண்ணி என்றால் என்ன?
புற்கள் மற்றும் தாவரங்களை மட்டும் உண்ணும் விலங்கு. எ-டு யானை, முயல்.
104. அனைத்துண்ணி என்றால் என்ன?
அனைத்துப் பொருள்களையும் உண்ணும் விலங்கு. காகம் தாவரப்பொருள், விலங்குப் பொருள் ஆகிய இரண்டையும் உண்பது.
105. தன்னின உண்ணி என்றால் என்ன?
தன்னின உயிர்களைத் தானே உண்ணும் உயிரி. அரச நாகம் சிறிய பாம்புகளை இரையாக உண்ணும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உண்ணும், என்ன, என்றால், விலங்கு