விலங்கியல் :: உணவும் ஊட்டமும்

41. வைட்டமின் D யின் வகைகள் யாவை?
வைட்டமின் D2 - எர்கோகால்சிபெரால்
வைட்டமின் D3 - கோலிகால்சிபெரால்
42. வைட்டமின் E இன் வேலை என்ன?
இதன் வேதிப்பெயர் டோக்கோஃபெரால் கொழுப்பில் கரைவது. ஆற்றல் அளிப்பது.
43. இது அடங்கியுள்ள உணவுப் பொருள்கள் யாவை?
முருங்கைக்காய், இறைச்சி.
44. இதன் குறைநோய் யாது?
மலடு.
45. வைட்டமின் H இன் வேதிப்பெயர் என்ன?
பயாடின். 46. வைட்டமின் K இன் வேலை என்ன?
இதன் வேதிப்பெயர் பில்லோகுயினோன். கொழுப்பில் கரைவது. குருதிக்கட்டைத் துண்டுவது.
47. இது அடங்கியுள்ள உணவுப்பொருள்கள் யாவை?
மஞ்சள் கரு, பால், பசுங்காய்கறிகள்.
48. வைட்டமின் G இன் வேதிப்பெயர் என்ன?
ரிபோபிளேவின்
49. வைட்டமின் Kஇன் வகைகள் யாவை?
K1 பைட்டனோடையோன்.
K2 - மெனாகுயுனோன்.
K3 - மெனாடையோன்.
50. வைட்டமின் L இன் வேலை யாது?
பால் சுரக்கக் காரணமாக இருப்பது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வைட்டமின், என்ன, யாவை, வேதிப்பெயர், வேலை, இதன்