விலங்கியல் :: உணவும் ஊட்டமும்

91. நுண் விழுங்குணவு கொள்ளல் என்றால் என்ன?
தொங்குணவு கொள்ளல். நுண்ணுவுகளைக் கொள்ளல். பரமேசியம் முதலிய உயிரிகள்.
92. நுண்ணுயிரி விழுங்கிகளை யார் எப்பொழுது கண்டறிந்தனர்?
1915-1916 இல் பிரடரிக் வில்லியம் டுவாட், பெலிக்ஸ் ஹிபாட் டெகரெலி ஆகிய இருவரும் கண்டறிந்தனர்.
93. பெருவாழ்வியல் என்றால் என்ன?
வாழ்நாள் நீட்டிப்பை ஆராயுந் துறை.
94. பெரு ஊட்டப் பொருள் என்றால் என்ன?
ஒரு தாவரத்தின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படும் அடிப்படைத் தனிமம். எ-டு கரி, நீர்வளி, இரும்பு, மக்னீசி யம், நைட்ரஜன் முதலியவை.
95. பெருவிழுங்கி என்றால் என்ன?
இது பெரிய அமீபா அணு. குச்சி வடிவ உயிரிகளை அழிப்பது. சிதைந்த கண்ணறைகளையும் சிவப்பணுக்களையும் அழித்து விழுங்க வல்லது. இவ்வாறு விழுங்கும் செயல் பெரு விழுங்கல் ஆகும். நோய்க்கு எதிராக உள்ள பாதுகாப்பு அமைப்பு இது.
96. விழுங்கணுக்கள் என்பவை யாவை?
ஒருவகைக் குருதி வெள்ளணுக்கள். தீங்குதரும் வெளிப் பொருள்களையும் குச்சிவடி உயிரிகளையும் விழுங்கிச் செரிக்க வைப்பவை.
97. ஒட்டுண்ணி என்றால் என்ன?
அடுத்த உயிரை அண்டி வாழும் உயிர். இது வாழ ஒம்புயிர் தேவை. இது அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இருவகை. இது தான் வாழும் உயிருக்குத் தீமை விளைவித்துத் தான் நன்மை பெறுவது. எ-டு நாக்குப்பூச்சி, ஈரல் புழு.
98. புறவாழ்வி என்றால் என்ன?
ஏனைய உயிர்களின் மேல் வாழும் விலங்கு.
99. அக ஒட்டுண்ணி என்றால் என்ன?
உடலின் உள்ளே வாழும் ஒட்டுயிரி. எ-டு. நாடாப்புழு.
100. கட்டாய ஒட்டுண்ணி என்றால் என்ன?
வேறு வழியில்லாது கட்டாயம் பிற உயிரைச் சார்ந்துள்ள உயிரி. எ-டு ஈரல் புழு, நாடாப்புழு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உணவும் ஊட்டமும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஒட்டுண்ணி, வாழும், கொள்ளல்