விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

51. இதயச் சுருக்கம் என்றால் என்ன?
இதயச் சுழற்சியின் சுருங்குநிலை. இது இதய விரிவுக்கு எதிரானது. இச்சுருக்கம் இதயக் கீழறைகள் சுருங்குவ தையே குறிக்கும்.
52. சுருங்கு குருதியழுத்தம் என்றால் என்ன?
எவ்விசையுடன் இடது கீழறை சுருங்குகின்றதோ அவ் விசை வெளிப்புறத் தமனிகளில் அளிக்கப்படுதல்.
53. சுருங்கு முணுமுணுப்பு என்றால் என்ன?
இதயம் சுருங்கும் பொழுது கேட்கப்படும் இரைச்சல். இரு பெருந்தமனிகள் அடைப்பாலும் மூவிழத் திறப்பு அடைப்பாலும் ஏற்படுவது.
54. குழாய் அடைப்பு என்றால் என்ன?
குருதிக் குழாயில் குருதி கட்டுவதால் குருதி ஒட்டம் தடைப்படுதல்.
55. மாரடைப்பு என்றால் என்ன?
இதயத்திற்குக் குருதி வழங்குந் தமனியில் ஏற்படும் அடைப்பு. உயிருக்கு ஊறு விளைப்பது.
56. குருதி என்றால் என்ன?
மனித உடலில் ஒடும் நீர்மம். இது ஒரு நீர்மத் திசு.
57. குருதியிலுள்ள அணுக்கள் யாவை?
1. வெள்ளணுக்கள் - நோய் நுண்ணங்களைக் கொல்பவை.
2. சிவப்பணுக்கள் - அக்சிஜனை எடுத்துச் செல்பவை.
3. தகட்டணுக்கள் - குருதி உறைய உதவுபவை.
58. குருதியிலுள்ள நீர்மப் பகுதி யாது?
கணிமம் (பிளாஸ்மா). எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது. குருதியணுக்களை எடுத்துச் செல்வது.
59. குருதியின் முக்கிய வேலைகள் யாவை?
1. உணவுப் பொருள்களைச் சுமந்து செல்வது.
2. மூச்சுவளிகள், வளர் ஊக்கிகள் ஆகியவற்றைச் சுமந்து செல்வது.
3. கழிவுகளை உரிய உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வது.
4. உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைப்பது.
5. வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்வது.
60. சிவப்பு குருதியணுக்கள் என்பவை யாவை?
குருதியிலுள்ளவை. ஈமோகுளோபின் என்னும் இரும்பு ஊட்டம் உள்ளவை. உயிர்வளியைச் சுமந்து செல்பவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், குருதி, செல்வது, சுமந்து, யாவை, எடுத்துச்