விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

41. தமனி என்றால் என்ன?
உயிர்வளி கலந்த குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் குழாய்.
42. சிரை என்றால் என்ன?
கரி இரு ஆக்சைடு கலந்த குருதியை இதயத்திற்கு எடுத்து வருவது.
43. கீழ்ப்பெருஞ்சிரை என்றால் என்ன?
உடலின் கீழ்ப் பகுதிகளிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டு வரும் பெரும் குருதிக்குழாய்.
44. மேற்பெருஞ்சிரை என்றால் என்ன?
உடலின் மேல்ப் பகுதிகளிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டு வரும் குருதிக் குழாய்.
45. தமனியையும் சிரையையும் இணைக்கும் குருதிக்குழாய்கள் யாவை?
தந்துகிகள்.
46. இதயக் குருதிக் குழாய்கள் யாவை?
இவை இதயத் தமனிகள் (2), இதயச்சிரைகள் (2) ஆகியவை. இதயத் தசைகளுக்கு குருதி வழங்குபவை.
47. திறப்பிகள் (வால்வுகள்) என்பவை யாவை?
ஒரு சமயம் மூடி மற்றொரு சமயம் திறக்கும் அமைப்பு. கதவு போன்றது. இதயத்திலும் குருதிக் குழாய்களிலும் உள்ளன. எ-டு. ஈரிதழ்த் திறப்பி, மூவிதழ்த் திறப்பி.
48. ஈரிதழ்த் திறப்பியின் வேலை என்ன?
இது இதயத்தின் இட மேலறைகளும் கீழறைக்கும் இடையே உள்ளது. கீழறைக் குருதியைப் பெரும் தமனிக்குச் செலுத்துவது.
49. மூவிதழ்த் திறப்பி என்றால் என்ன?
இது வல மேலறைக்கும் கீழறைக்கும் இடையிலுள்ளது. வலக் கீழறை சுருங்கும்பொழுது குருதி வெளியேறும். அதாவது நுரையீரல் தமனிக்குச் செல்லும்.
50. இதயவிரிவு என்றால் என்ன?
இதயச் சுழற்சியின் ஒரு பகுதி. இதில் இதயக் கீழறைகளில் குருதி நிரம்பும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், குருதியை, திறப்பி, குருதி, உடலின், குருதிக், யாவை