விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
321. மூக்கடிச்சதை என்பது என்ன?
முக்கு தொண்டை ஆகியவற்றிற்குப் பின் காணப்படும் கொழுப்பு நீர்ச் சுரப்பிகள். இவை பருக்கும் பொழுது கேட்டலும், மூச்சுவிடுதலும் கடினமாக இருக்கும்.
322. ஒரு பொருளின் மணத்தை உணர்வதற்கு அது எந்நிலையில் இருக்க வேண்டும்?
வளி நிலையில் இருக்க வேண்டும். இதை முகர் நரம்பு மூளைக்குத் தெரிவிக்கிறது.
323. நாக்கு எவற்றின் மூலம் சுவையை அறிகிறது?
சுவை நரம்புகள் மூலம் அறிகிறது.
324. ஒரு பொருளின் சுவையை அறிய அது எந்நிலையில் இருக்க வேண்டும்?
நீர்மநிலையில் அதாவது கரைசல் நிலையில் இருக்க வேண்டும். சுவை நரம்புகள் சுவையை மூளைக்குத் தெரிவிக்கின்றன.
325. நாக்கு அறியும் பல சுவைகள் யாவை?
நாக்கின் நுனி இனிப்பையும், அடி கசப்பையும், பக்கங்கள் புளிப்பையும் உணர்கின்றன. உவர்ப்பையும் துவர்ப்பையும் எல்லாச் சுவையரும்புகளும் உணர்கின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இருக்க, வேண்டும், சுவையை