விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
311. அறை என்னும் சொல் எதைக் குறிக்கிறது?
1. புறச்செவி.
2. இதய அறை.
312. செவியின் சிறப்பென்ன?
ஐம்பொறிகளில் சிறப்புள்ளது. பல செய்திகளைக் கேட்டு அறிந்து நாம் அறிவு பெற உதவுகிறது.
313. செவிப்பறையின் வேலை என்ன?
நடுச் செவியில் அமைந்து ஒலிஅதிர்வுகளைச் செவி நரம்புகளுக்கு அனுப்புகிறது.
314. நடுச்செவிக் குழலின் வேலை என்ன?
செவிப்பறைக்கு இருபுறங்களிலும் காற்றழுத்தத்தைச் சரி செய்து சரியாகக் கேட்க உதவுகிறது.
315. நடுச்செவியிலுள்ள மூன்று சிற்றெலும்புகள் யாவை?
சுத்தி எலும்பு, பட்டைச் சிற்றெலும்பு, அங்கவடிஎலும்பு.
316. உட்செவியிலுள்ள இரு பகுதிகள் யாவை?
1. காது நத்தை எலும்பு கேட்டல், 2. அரைவட்டக் குழல்கள் - உடலுக்கு நிலைப்பு அளித்தல்
317. நாம் ஒலியை எவ்வாறு உணர்கிறோம்?
ஒலி அலைகள் நரம்புத் துண்டல்களாக மாறச் செவி நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும்பொழுது நாம் ஒலியை உணர்கிறோம்.
318. கேள் நரம்பு என்றால் என்ன?
செவிநரம்பு, முதுகெலும்புள்ள விலங்குகளின் உட்செவியிலுள்ள 8 ஆம் மூளை நரம்பு. ஒலி அதிர்வுகளை மூளைக்கு தெரிவிப்பது.
319. செவிப்பறையின் வேலை என்ன?
இது ஒலி அதிர்வுகளை உட்செவிக்குச் செலுத்துகிறது.
320. மயிர்ச்சிலிர்ப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
தோல் தசை சுருங்குவதால் ஏற்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, நரம்பு, வேலை, நாம்