விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

1.செரித்தல் மண்டலம்
1. உணவு வழி (பாதை) என்றால் என்ன?
வாயில் தொடங்கிக் கழிவாயில் முடியும் ஒரு நீளமான குழாய். உணவு செரிக்க உதவுகிறது.
2. உணவு வழியிலுள்ள உறுப்புகள் யாவை?
தொண்டை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சுரப்பிகள்.
3. செரித்தல் மண்டலம் என்றால் என்ன? இதன் வேலை என்ன?
செரித்தல் உறுப்புகளும் சுரப்பிகளும் உள்ளது. உணவு செரிக்க உதவுவது.
4. வாய்க்குழி என்றால் என்ன?
வாய்க்கடுத்துள்ளது. உணவு இதன் மூலம் உணவு வழிக்குச் செல்வது.
5. வாய்க்குழியிலுள்ள உறுப்புகள் யாவை?
உமிழ் நீர்ச்சுரப்பிகள், பற்கள், நாக்கு.
6. இரைப்பை என்பது யாது?
உணவுக் குழாய்க்கு அடுத்துள்ள பகுதி.இதில் இரைப்பை நீர்ச்சுரப்பிகள் உள்ளன. உணவு ஒரளவுக்கு இங்குச் செரிக்கிறது.
7. பற்கள் என்பவை யாவை?
கடின வெண்ணிற உறுப்புகள். முதுகெலும்புகளின் வாயில் அமைந்துள்ளன.
8. பற்களின் பொது வேலைகள் யாவை?
1. உணவை அரைக்க.
2. பொருள்களைப் பற்ற
3. கடிக்க,
4. போரிட
9. பற்களின் நான்கு வகைகள் யாவை?
1. வெட்டுப்பற்கள் - உணவைத்துண்டிக்க.
2. கோரைப்பற்கள் - உணவைக்கிழிக்க
3. முன் கடைவாய்ப்பற்கள் - அரைக்க
4. பின்கடைவாய்ப் பற்கள் - அரைக்க
10. பல்லமைவு என்றால் என்ன?
தாடையில் பற்கள் அமைந்திருக்கும் முறை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உணவு, யாவை, என்ன, என்றால், பற்கள், அரைக்க, உறுப்புகள், செரித்தல், இரைப்பை