விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
71. குருதி வெள்ளணுக்கள் யாவை?
குருதியிலுள்ளவை. உடலின் போர் வீரர்கள்.
72. குருதியழுத்தம் என்றால் என்ன?
முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை.
73. இதன் அளவு என்ன?
இயல்பானவரிடம் 120-80க்கும் இடையில் இருக்கும்.
74. குருதியழுத்தத்தை எதனால் அளக்கலாம்?
குருதியழுத்தமானியால் அளக்கலாம்.
75. குருதி செலுத்துதல் என்றால் என்ன?
குருதி குறைவாக உள்ளவர்களுக்குத் தேவைப்படும் குருதியைப் பிறரிடமிருந்து பெற்றுச் செலுத்துவது. இதற்குக் குருதி வங்கியுள்ளது.
76. குருதி உறைதல் என்றால் என்ன?
குருதி காற்றில் பட்டுப் தெளிநீராகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி.
77. இதைத் தூண்டுங் காரணிகள் யாவை?
திராம்பின், பைபிரினோஜன், கால்சியம் உப்புகள் ஆகியவை.
78. இதன் நன்மைகள் யாவை?
1. வெட்டுக்காயம் மூடப்படுகிறது.
2. குருதி இழப்பு தடுக்கப்படுவதால் உயிருக்கு ஊறுபடுவது தடுக்கப்படுகிறது.
3. இஃது உடலுக்கு இயற்கை அளிக்கும் பாதுகாப்பு
79. ஒருங்கொட்டல் என்றால் என்ன?
ஒரு சேர ஒட்டிக் கொள்ளும் நிலை. இச்செயல் எதிர்ப் பொருள் விளைவுகளில் ஒன்று. குச்சிவடிவ உயிரிகள், குருதியணுக்கள் முதலியவை இவ்வியல்பு கொண்டவை.
80. நாடித்துடிப்பு என்றால் என்ன?
இதயத் துடிப்பை ஒட்டித் தமனிச்சுவர்கள் விரிவதால் உண்டாகும் துடிப்பு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - குருதி, என்ன, என்றால், யாவை