விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
31. இதயம் என்பது என்ன?
உட்குழிவான தசை உறுப்பு. குருதியை உடல் முழுதும் செலுத்துவது.
32. இதயம் எங்கு அமைந்துள்ளது?
மார்பில் நுரையீரல்களுக்கு நடுவே அமைந்துள்ளது.
33. நம் உடலிலுள்ள பெரிய தமனி எது?
பெருந்தமனி.
34. நம் உடலிலுள்ள இரு பெரும்சிரைகள் யாவை?
கீழ்ப்பெருஞ்சிரை, மேற்பெருஞ்சிரை.
35. நிணநீர்க் குழாய்களில் பெரியது எது?
மார்பு நிணநீர் நாளம்.
36. மூவகைக் குருதிக் குழாய்கள் யாவை?
தமனிகள், சிரைகள், தந்துகிகள்.
37. பெருந்தமனி என்பது யாது?
நம் உடலிலுள்ள பெருங் குருதிக்குழாய். பல தமனிகளாகப் பிரிந்து குருதியினை இதயத்திலிருந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது.
38. உயிர்வளியுள்ள குருதியைக் கொண்டு செல்லும் ஒரு குருதிக் குழாய் எது?
நுரையீரல் சிரை.
39. கரி இரு ஆக்சைடு உள்ள குருதியைக் கொண்டு செல்லும் ஒரு தமனி எது?
நுரையீரல் தமனி.
40. சிரைகளில் திறப்பிகள் உள்ளன. தமனிகளில் இல்லை. ஏன்?
சிரைகளில் அழுத்தம் குறைவு. ஆகவே, திறப்பிகள் உள்ளன. தமனிகளில் அழுத்தம் அதிகம். ஆகவே, திறப்பிகள் இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - திறப்பிகள், தமனி, உடலிலுள்ள