விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
281. கூட்டுப்புழு என்றால் என்ன?
பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றில் மூன்றாம் நிலை. இது ஒய்வு நிலைப் பருவம். எ-டு வண்ணத்துப்பூச்சி.
282. இனப்பெருக்க வளம் என்றால் என்ன?
தன் வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணுயிர் இடும் முட்டை அளவு.
283. ஒற்றைக்கண் இளரி என்றால் என்ன?
ஒட்டிளரி. நண்டுவகை விலங்குகளில் இளம் உயிர்.
284. வால் வேற்றிளரி என்றால் என்ன?
முதல் தண்டுள்ள விலங்குகளின் தனிபாலுயிரியின் கருமுட்டையிலிருந்து உண்டாகும் இளம் உயிர்.
285. புழு இளரி என்றால் என்ன?
இது காலும் தலையுமற்ற இனம் உயிர். சில கணுக்காலி களில் காணப்படுவது. காற்றிலும் காணப்படும். எ-டு ஈ போன்ற ஈரிறக்கைப் பூச்சிகள்.
286. வேற்றிளரி என்றால் என்ன?
முட்டையிலிருந்து வெளிவரும் இளமுயிர்.
287. வேற்றிளரியின் பல வகைகள் யாவை?
1. கம்பளிப்புழு - வண்ணத்துப்பூச்சி
2. தலைப்பரட்டை - தவளை
3. தட்டை இளரி - ஒபிலியா
4. மருங்கிளறி - கடல் சாமந்தி
5. பைலிடியம் இளரி - குழல் வாய்ப்புழு
6. மியூல்லர் இளரி - தட்டைப்புழு
7. ஆரஇளரி - நட்சத்திரமீன்.
288. தட்டை இளரி என்பது யாது?
குழிக்குடல்களின் வேற்றளரி.
289. மருங்கிளரி என்றால் என்ன?
கடல் சாமந்திகளுக்குரிய இளரி.
290. இறட்டை இறகிளரி என்றால் என்ன?
நட்சத்திர மீனுக்குரிய இருமருங்கிளரி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, இளரி, உயிர்