விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

271. பெற்றோர் கலப்பு என்றால் என்ன?
ஒரு கலப்பினத்தின் பாலணு, அதன் பெற்றோர் பாலணுக்கள் ஒன்றினால் கருவுறுதல்.
272. செயற்கை விந்தேற்றம் என்றால் என்ன?
செயற்கை முறையில் விந்தினைப் பெண் கருப்பையில் செலுத்துதல். உயர்வகைக் கலப்பு விலங்குகளை உண்டாகக் இம்முறை பயன்படுவது. எ-டு கறவை மாடுகள்.
273. மலடாக்கல் என்றால் என்ன?
ஆண் பெண் இருப்பெருக்க உறுப்புகளை நீக்கி, இனப்பெருக்க ஆற்றல் இல்லாமல் செய்தல்.
274. இருபால் என்றால் என்ன?
ஆண், பெண் ஆகிய இருபால் இனக் கண்ணறைகளைத் தோற்றுவிக்குந் தன்மை. எ-டு மண்புழு.
275. இனப்பெருக்க மாற்றம் என்றால் என்ன?
சில விலங்குகளின் வாழ்க்கைச் சுழற்சியில் கலவி இனப் பெருக்கமும் கலவி இலா இனப்பெருக்கமும் மாறி மாறி வருதல். அதாவது இது ஒரு தலைமுறை மாற்றம்.
276. இளமைப் பெருக்கம் என்றால் என்ன?
இளம் உயிரியில் ஏற்படும் இனப்பெருக்கம்.இளம் உயிரி என்பது முட்டையிலிருந்து வெளிவந்த உயிர், வளர்ச்சி நிலையில் உள்ளது. எ-டு சலமாந்தரின் இளம் உயிர் இத்திறன் கொண்டது.
277. அடையளித்தல் என்றால் என்ன?
திசு வளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அளித்தல். பிறந்த முதிர்ச்சியற்ற குழந்தையைச் செயற்கைக் சூழ்நிலையில் வளர்த்தல்.
278. பேரிளமை என்றால் என்ன?
மாறா இளமை. இளமைப் பண்புகள் இருக்கும் போதே ஒர் உயிரி இனப்பெருக்கம் முதலிய செயல்களைக் செய்தல். இது தற்காலிகமாகவும் நிலையாகவும் இருக்கலாம். விலங்கிற்கு ஆச்சோலாட்டிலும் தாவரத்திற்கு லெம்னாவும் எடுத்துக்காட்டுகள்.
279. வளர்உருமாற்றம் என்றால் என்ன?
முட்டைப்பருவத்திலிருந்து முதிர்ந்தபருவத்திற்கு முன்வரை நடைபெறும் மாற்றங்கள் இதில் அடங்கும். எ-டு தலைப்பரட்டை தவளையாதல். கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாதல். இது அதன் வாழக்கை வரலாறு ஆகும்.
280. கம்பளிப்புழு என்றால் என்ன?
பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றில் முட்டையை அடுத்த இரண்டாம் நிலை. இது ஒர் இளம் உயிரி அல்லது இளரி. மிகு வளர்ச்சிப் பருவம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, இளம், உயிரி, பெண்