விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
261. கருவளர்காலம் குறைந்த பாலூட்டிகள் இரண்டு கூறு.
1. சுண்டெலி - 3 வாரங்கள்
2. முயல் - 5 வாரங்கள்
262. புறப்படை என்றால் என்ன?
கருவின் வெளிப்புற அடுக்கு. தோல், தோல்சார் அமைப்புகள், நரம்பு மண்டலம், உணர் உறுப்புகள் ஆகியவற்றை இது உண்டாக்குகிறது.
263. அகப்படை என்றால் என்ன?
வளர்க்கருவின் மூன்றடுக்குகளில் ஒன்று.
264. கருக்கோளியம் என்றால் என்ன?
பதிவதற்கு முன் பிளவிப் பெருகலின் பிந்திய நிலை களிலுள்ள பாலூட்டி முட்டை நீர் நிரம்பிய உட்குழி வான அணுக்ககோளத்தாலானது. இதிலிருந்து கரு வளர்கிறது.
265. கருக்கோளம் என்றால் என்ன?
கருவுற்ற முட்டை பிளவிப் பெருகலினால் உண்டாகும் கோளவடிவ வளர்நிலை.
266. கருநோக்குமுனை என்றால் என்ன?
கருவளர்முனை. முட்டையில் அண்மையில் கரு அமைந்திருக்கும் பகுதி, வழக்கமாக, இது கருவிலகு முனைக்கு எதிராக இருக்கும்.
267. பதியஞ்செய்தல் என்றால் என்ன?
திசு அல்லது உறுப்பை ஒர் உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு மாற்றிப் பொருத்துதல். எ-டு. சிறு நீரகத்தை மாற்றிப் பொருத்துதல்.
268. வாழ்நாள் என்பது யாது?
பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள காலம். இது உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும். ஒராண்டு வாழும் விலங்கும் பல்லாண்டுகள் வாழும் விலங்கும் உண்டு. மனிதனின் சராசரி வாழ்காலம் 100 ஆண்டுகள்.
269. வாழ்க்கைச்சுற்று என்றால் என்ன?
உயிரிகளின் வாழ்க்கையில் காணப்படும் வளர்ச்சி நிலைகள். பூச்சி முதலியவற்றில் நான்கு நிலைகளிலும் கீழினத் தாவரங்களில் இருநிலைகளிலும் காணப்படுவது. பொதுவாகக் கருவணு தோன்றி முதிரும் வரை உள்ள நிலைகளை வாழ்க்கைச்சுற்று உள்ளடக்கியது.
270. கலப்பின உயிரி என்றால் என்ன?
வேறுபட்ட இருவகை உயிர்களின் கால்வழி.எ-டு. கோவேறு கழுதை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்