விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்
291. முதிர்இளரி என்றால் என்ன?
ஆம்பிலோஸ்பேமா பேரின வகைகளின் வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப்பெருக்கம் செய்ய வல்லது.
292. உதட்டிளரி என்றால் என்ன?
நன்னீர்ச்சிப்பி வகை மட்டியின் இளம் உதட்டு உயிரி.
293. முழு உருமாறிகள் என்பவை யாவை?
தம் வாழ்க்கைச் சுற்றில் முழு உருமாற்றம் பெறும் பூச்சிகள் - வண்ணத்துப்பூச்சி. இதில் முட்டை கம்பளிப் புழு, கூட்டுப்புழு, முதிரி என நான்கு பருவங்கள் உண்டு.
294. முற்றிளரி என்றால் என்ன?
நீரில் வாழ்ந்து செவிள்களால் உயிர்க்கும் நிறைஇளரி. பொதுவாகப் பல பூச்சிவகைகளில் காணப்படுவது.
295. நிறை உயிரி என்றால் என்ன?
உருமாற்றம் நிறைவடைந்து கூட்டைவிட்டு வெளிவரும் உயிரிகளின் வாழ்க்கைச் சுற்றில் இறுதி நிலையான நான்காம் நிலை, எ-டு தவளை, வண்ணத்துப்பூச்சி.
11. ஐம்பொறிகள்
296. ஐம்பொறிகள் யாவை?
கண், காது, மெய், வாய், முக்கு.
297. இவற்றின் புலன்கள் யாவை?
1. கண் - பார்த்தல்
2. காது - கேட்டல்
3. மெய் (தோல்) - தொடுஉணர்ச்சிகளை அறிய. 4. வாய் (நாக்கு - சுவையறிதல்
5. முக்கு - முகர்தல்
298. இவற்றில் சிறந்த இரண்டு எவை? ஏன்?
கண், காது. பார்த்தறிதல், கேட்டறிதல் ஆகியவை மூலம் நாம் பெரும் அறிவில் பெரும்பகுதியாகும். பொதுவாக, ஐம்பொறிகள் அறிவு வாயில்கள் என்ப்படும்.
299. கண்ணின் சிறப்பென்ன?
ஐம்பொறிகளில் இன்றியமையாதது. பொருள்களைப் பார்த்து நம் அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவுவது.
300. கண்ணிலுள்ள மூன்று படலங்கள் யாவை?
1. விழிப்படலம். இது முன்புறம் விழிவெண்படலமாகி யுள்ளது.
2. விழியடிக் கரும்படலம். இது முன்பக்கம் கருவிழிப் படலமாகியுள்ளது.
3. விழித்திரை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், யாவை, என்ன, காது, ஐம்பொறிகள்