விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

251. முனைப்புரி (அக்ரோசோம்) என்றால் என்ன?
விந்தணுவின் தலைப்பகுதி. முட்டையைத்துளைத்துச் செல்லப்பயன்படுகிறது.
252. கருப்பை என்றால் என்ன?
பெண்ணிடத்துக் கருக்குழலின் விரிந்த பகுதி. இதில் முட்டைகள் வளரும்.
253. சூல்பை என்றால் என்ன?
சூல் அல்லது முட்டை வரும் இடம்.
254. கரு என்றால் என்ன?
கருவணுவிலிருந்து உண்டாகும் பாலினப் பொருள். புதிய கால் வழியை உண்டாக்குவது.
255. கருவியல் என்றால் என்ன?
கருத்தோற்றம், அதன்வளர்ச்சி ஆகியவற்றை ஆராயும் துறை.
256. பிளவுபடல் என்றால் என்ன?
இனப்பெருக்கத்தினால் ஒர் உயிரி சமபகுதியாக இரண்டாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் தனித்தனி இளம் உயிரிகளாதல், எ-டு அமீபா.
257. பிளவிப்பெருகல் என்றால் என்ன?
கருவுற்ற முட்டை இழைப்புரிவுகளாய்ப் பிரிவுறுதல். இதில் சமனண்ணிக்கை உட்கருவினுள் சிறிய கண்ணறைகள் உண்டாகும்.
258. கருவுயிரி என்றால் என்ன?
உடற்பகுதிகள் எல்லாம் தெளிவாகத் தோன்றியபின் கருப்பையிலுள்ள அல்லது முட்டையிலுள்ள உயிரி.
259. கருவளர்காலம் என்றால் என்ன?
கரு உருவாதல் முதல் அது பிறக்கும் வரையுள்ள இடைவெளி. இது யானைக்கு அதிகம், 20 மாதங்கள். (கஜ கர்ப்பம்)
260. பாலூட்டிகளின் கருவளர்காலம் எவ்வளவு?
9-12 மாதங்கள்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்