விலங்கியல் :: உடலின் மண்டலங்கள்

241. மண்ணிரல் என்றால் என்ன?
இரைப்பையின் மேல் பகுதியிலுள்ள மென்மையான குழாய் உறுப்பு.
242. இதன் வேலைகள் யாவை?
1. புதிய சிவப்பணுக்களை உண்டாக்குகிறது.
2. வெள்ளணுக்களை உற்பத்தி செய்கிறது.
243. நாளமுள்ள இரு கழிவுநீர்ச் சுரப்பிகள் யாவை?
வியர்வைச் சுரப்பிகள், சிறுநீரகங்கள்.
10. இனப்பெருக்க மண்டலம்
244. இனப்பெருக்க மண்டலம் என்றால் என்ன?
இனப்பெருக்கத்திற்குரிய ஆண் உறுப்புகளும் பெண் உறுப்புகளும் உள்ள தொகுதி. இவை மனிதனிடம் நன்கு வளர்ந்துள்ளன.
245. இனப்பெருக்கம் என்றால் என்ன?
விந்தணு கருமுட்டையோடு சேர்ந்து கருவணு உருவா கிறது.இதிலிருந்து புதிய உயிர் உருவாகிறது.இச்செயலே இனப்பெருக்கம் ஆகும். உயிர் இனங்கள் தொடர்ந்து சென்று நிலைத்திருக்க இது மிக இன்றியமையாதது.
246. இனப்பெருக்கம் எத்தனை வகைப்படும்?
1. கலவி இனப்பெருக்கம் - விந்தணு கருவணு மூலம் நடைபெறுவது.
2. கலவியிலா இனப்பெருக்கம் - பிளவுபடல், துண்டாதல் மூலம் நடைபெறுதல்.
247. கன்னிப் பெருக்கம் என்றால் என்ன?
பூச்சிகளில் காணப்படும் ஒரு கன்னி இனப்பெருக்க முறை. கலவி இல்லாமல் பெண்கள் பெண்களையே இதில் உண்டாக்கும்.
248. கீழின விலங்குகள் மேற்கொள்ளும் கலவியிலா இனப்பெருக்க முறைகள் யாவை?
பிளவுபடல், கன்னி இனப்பெருக்கம்.
249.விந்தணு என்றால் என்ன?
பால் இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் ஆண் அணு. தலை, உடல், வால் உண்டு.
250. கருமுட்டை என்றால் என்ன?
விந்தணுவை ஏற்கும் பெண் அணு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 32 | 33 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - இனப்பெருக்கம், என்றால், என்ன, இனப்பெருக்க, விந்தணு, யாவை