மருத்துவம் :: சில அடிப்படைகள்
51. மூப்படைவு என்றால் என்ன?
வயது ஆகஆக உள்ளமும் உடலும் இயல்பாக மாற்றம் அடைதல்.
52. வளர்சிதை மாற்றம் என்றால் என்ன?
அடிப்படை வேதிமாற்றம். வளர்மாற்றம் சிதைமாற்றம் என இரு நிலைகளைக் கொண்டது. எ-டு. உணவு தன்வயமாதல், அதாவது திசுவாகி வளர்ச்சி ஏற்படுதல், வளர்மாற்றம். சிதைமாற்றம் அழிவு மாற்றம். உயிர்வளி ஏற்றம் திசுக்களில் நடைபெறுவதால் ஆற்றல் உண்டாதல்.
53. இறப்பு என்றால் என்ன?
திசுக்களில் வளர்சிதை மாற்றம் அறவே ஒடுங்குவதால் ஏற்படும் நிலை. திசு மூச்சு நிற்றல்.
54. இறப்பு வீதம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் தனியாட்கள் இறக்கும் அளவு. மேம்பட்ட மக்கள் நல்வாழ்வு வசதிகளால், இந்த வீதம் தற்காலத்தில் கணிசமாகக் குறைந் துள்ளது.
55. உணர்வகற்றல் என்றால் என்ன?
வலி உணர்வை அறுவையின் பொழுது நீக்கல்.
56. உணர்வகற்றிகள் யாவை?
கொக்கேன், குளோரோபாம். வேறு பெயர் மயக்க மருந்துகள்.
57. உணர்வகற்றுநர் என்பவர் யார்?
மயக்க மருந்து மூலம் வலியுணர்வை நீக்கும் மருத்துவர்.
58. அழற்சி என்றால் என்ன?
காயம், நோய், தொற்றல், உறுத்தல் முதலியவற்றிற்குத் திசு உண்டாக்கும் பாதுகாப்புச் செயல். அறிகுறிகள்: வீக்கம், சிவத்தல், அரிப்பு, வலி, எ-டு. நுரையீரல் அழற்சி.
59. முறிவு என்றால் என்ன?
எலும்பு இரண்டாக முறிவதைக் குறிக்கும்.
60. இதன் அறிகுறிகள் யாவை?
வீக்கம், உருக்குலைவு, வேலை செய்வது நிற்றல், குறுகல் முதலியவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, மாற்றம்