மருத்துவம் :: சில அடிப்படைகள்
101. பாலிமரேஸ் தொடர்வினை என்றால் என்ன?
இஃது ஒர் உயிரியல் வேதிநுட்பம்.
102. இதனைக் கண்டறிந்தவர் யார்?
அமெரிக்க உயிர் வேதி இயலார் கேரி முல்லிஸ். இதற்காக 1993க்குரிய நோபல் பரிசைப் பெற்றார்.
103. இதன் சிறப்பு யாது?
மரபுவழி குறைபாடுகொண்ட மரபணுக்களை இனங்கான இந்நுட்பம் பெரிதும் பயன்படும். மரபாக்க வளர்ச்சிக்கு இது அச்சாணி போன்றது. தவிர, மருத்துவ ஆய்விலும் நோய் கண்டறிதலிலும் தடய அறிவியலி லும் பெரிதும் பயன்படக்கூடியது.
104. நைலாந்தர் வினையாக்கி என்றால் என்ன?
பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட்டு, பொட்டாசியம் அய்டிராக்சைடு, பிஸ்மத் துணை நைட்ரேட் ஆகியவை கரைந்த கரைசல். சிறுநீரில் சர்க்கரை இருப்பதைக் கண்டறியப் பயன்படுவது.
105. நடுநிலையாக்கி என்றால் என்ன?
காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு. சோடியம் இரு கார்பனேட்
106. சவக்கிடங்கு என்பது யாது?
மருத்துவமனையில் இறந்த உடல்கள் வைக்கப்பட் டிருக்கும் இடம்.
107. மருத்துவமனை என்றால் என்ன?
நோயாளிகளுக்கு மருந்து கொடுத்தும் அறுவை செய்தும் நோய்களைப் போக்கும் இடம். இது பொது மருத்துவமனை (அரசு சார்ந்தது), தனியார் மருத்துவ மனை என இரு வகை.
108. உயிரின் அடிப்படை அலகும் வேலையலகும் எது?
கண்ணறை (செல்)
109. சிறுநீரகத்தின் அடிப்படையலகும் வேலையலகும் எது?
சிறுநீர்ப்பிரித்தி.
110. நரம்பு மண்டலத்தின் அடிப்படையலகும் வேலையலகும் எது?
நரம்பணு அல்லது நரம்பன்.
111. வளர்தூண்டிகளுக்கும் (ஆர்மோன்கள்) வளர்ப்பிகளுகும் (ஆக்சின்கள்) உள்ள வேறுபாடு யாது?
முன்னவை நாளமில்லாச் சுரப்பிகளால் சுரக்கப் படுபவை. பின்னவை தாவரங்களால் சுரக்கப்படுபவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வேலையலகும், யாது