மருத்துவம் :: சில அடிப்படைகள்
41. சுழற்சி என்றால் என்ன?
நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் வருந் தொடர். எ-டு. இதயச்சுழற்சி.
42. உயிர்த்தலின்மை என்றால் என்ன?
மூச்சுவிடல் இல்லாத நிலை. இறப்பின் அறிகுறி.
43. மூச்சு ஈவு என்றால் என்ன?
மூச்சுவிடுதலின் பொழுது செலவழிந்த உயிர்வளிப் பருமனுக்கும் உண்டாகும் கரி இரு ஆக்சைடு பரும னுக்குமுள்ள வீதம். இது வழக்கமாக 0.8.
44. ஆக்சிஜன் ஏற்றம் என்றால் என்ன?
ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல் அல்லது நீர்வளி நீங்கல். சிதை மாற்றம் உயிர் வாழத் தேவைப்படும் ஒர் அடிப்படைச் செயல்.
45. ஆக்சிஜன் செலுத்தல் (உயிர்வளி) என்றால் என்ன?
மூச்சுப்பரப்பில் ஈமோகுளோபினுடன் தற்காலிகமாக உயிர்வளியைச் சேர்த்தல்.
46. ஆக்சிஜன் கடன்பாடு என்றால் என்ன?
கடும் பயிற்சியின்பொழுது உயிர்வளிக் குறைவால் தசைகளில் பால்காடி குறைதல்.
47. ஆக்சிஜன் ஈவு என்றால் என்ன?
ஒரு திசு அல்லது உயிரி உயிர்வளியை நுகரும் அளவு. ஒரு மில்லி கிராமுக்கு இத்தனை மைக்ரோ லிட்டர் என்று தெரிவிக்கப்படுவது. சிற்றுயிரிகளுக்கு அதிக ஈவும் பேருயிரிகளுக்குக் குறைந்த ஈவும் தேவை.
48. உயிர்வளி செலுத்தல் நடைபெறும் வழிகள் யாவை?
1. மூக்குச் செருகிகள் மூலம் செலுத்தல். ஒரு நிமிக்கு 4 லிட்டர். இது மூச்சுச் சிற்றறை உயிர்வளியை 30% அளவுக்கு உயர்த்தும்.
2. உயிர்வளிக் கூண்டு. இதில் மூச்சுச் சிற்றறை உயிர்வளி 45% இருக்கும்.
3. முகமூடி இதில் மூச்சுச் சிற்றறை உயிர்வளி 90% இருக்கும்.
49. உயிர்ப்புத்திறன் என்றால் என்ன?
ஆழ்ந்த உள்மூச்சிற்குப்பின், நுரையீரல்களிலிருந்து வெளித் தள்ளப்படும் காற்றின் மொத்த அளவு. இது மனிதனிடம் 3400-4000 க.செ.மீ. அளவில் உள்ளது.
50. பயட் மூச்சுவிடல் என்றால் என்ன?
முப்படல அழற்சியின் பொழுது காணப்படுவது. மூச்சு விடுவதில் இடைநிறுத்தங்கள் இருக்கும். ஆனால், செயினி - ஸ்டோக்ஸ் மூச்சு விடுதலில் உள்ளது போன்ற ஏற்றம் இறக்கம் இரா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, உயிர்வளி, ஆக்சிஜன், இருக்கும், சிற்றறை, மூச்சுச், அல்லது, மூச்சு, செலுத்தல்