மருத்துவம் :: சில அடிப்படைகள்

91. கூம்ஃப் ஆய்வு என்றால் என்ன?
சிவப்பணுக்களில் எதிர்ப்புப் பொருள்கள் இருப்பதைக் கண்டறியும் மிக நுண்ணிய ஆய்வு.
92. இதன் வகைகள் யாவை?
1. நேரடி முறை - சிவப்பணுக்களில்ஒட்டியிருக்கும் எதிர்ப்புப் பொருள்களைக் காணல்.
2. மறைமுக முறை - தெளிநீரில் கட்டில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் எதிர்ப்பொருள்களைக் கண்டறிவது. நேரடிமுறைக் குருதிப் பகுப்பு நோயியங்களை ஆய்ந்தறிய மிகவும் பயனுள்ளது.
93. ஸ்னெல்லன் ஆய்வு எழுத்துகள் யாவை?
கண் பார்வையை ஆய்ந்து பார்க்க ஒர் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் பல வகை எழுத்துகள்.
94. கான் ஆய்வு என்றால் என்ன?
நோயாளிகளின் தெளிநீரை, மேகநோய் உள்ளதா என்று ஆய்ந்து பார்க்கும் சோதனை. மிக எளியதும் வசதியானதுமான ஆய்வு.
95. சான்டெக்-ஆஷ்கிம் ஆய்வு என்றால் என்ன?
கருப்பேற்றை உறுதி செய்யும் ஆய்வு.
96. ஆப்கார் புள்ளி எண் என்றால் என்ன?
புதிதாகப் பிறந்த குழந்தையின் உயிர்ப்புத் திறனை மதிப்பிடும் முறை. குறிப்பாக இதய வீதத்தையும் மூச்சு முயற்சியையும் மதிப்பிடுவது.
97. சூட்ஸ்-சார்ல்டன் வினை என்றால் என்ன?
செங்காய்ச்சலை உறுதி செய்யும் ஆய்வு.
98. வீடல் வினை என்றால் என்ன?
முறைக் காய்ச்சலுக்குரிய குருதி ஆய்வு.
99. வெசர்மன் வினை என்றால் என்ன?
ஒரு குருதி ஆய்வு. ஆய்வுக்காக எடுக்கப்பட்ட குருதியில் மேக நோய் உள்ளதா என்பதைக் காணும் ஆய்வு.
100. வெயில்-பெலிக்ஸ் வினை என்றால் என்ன?
டைபஸ் நோய்க்குரிய ஒருங்கொட்டல் வினை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - ஆய்வு, என்ன, என்றால், வினை, முறை