மருத்துவம் :: சில அடிப்படைகள்

31. கண்காணித்தல் என்றால் என்ன?
தானியங்கு முறையில் நோயாளியின் குருதி அழுத்தம், வெப்பநிலை, துடிப்பு, மூச்சு முதலியவற்றைப் பதிவு செய்தல்.
32. முன்கணிப்பு என்றால் என்ன?
ஒரு நோய் நிலை அல்லது போக்கு பற்றி கொள்ளும் கருத்து.
33. நஞ்சு என்றால் என்ன?
நச்சுத் தன்மையை உண்டாக்கும் பொருள்: உயிருக்கு ஊறு தருவது. எ-டு. சயனைடு.
34. உணவு நஞ்சு என்றால் என்ன?
தொற்றுள்ள உணவை உட்கொள்வதால் வாந்தி, கழிச்சல் முதலியவை ஏற்படுதல். நுண்ணுயிரிகளின் நஞ்சு உணவில் கலந்திருப்பதே இந்நிலைக்குக் காரணம்.
35. புரைவழி என்றால் என்ன?
இரு படல் பரப்புகளுக்கு இடையே அமைந்தள்ள இயல்பு நீங்கிய வழி. எ-டு. குதப்புரைவழி.
36. தேக்கம் என்றால் என்ன?
உடலின் ஒரு பகுதியில் குருதி சேர்தல்.
37. காரத்தேக்கம் என்றால் என்ன?
குருதியில் காரப்பண்பு மிகுந்திருத்தல்.
38. நீட்டல் என்றால் என்ன?
முறிந்த உறுப்பை நேராக வைத்தல்.
39. இதற்குரிய இரு முறைகள் யாவை?
1. தோல் இழுப்பு
2. எலும்பு இழுப்பு.
40. அறிகுறி என்றால் என்ன?
நோய்த்தன்மையின் வெளிப்பாடு. இது உடலிலும் உடற் செயல்களிலும் மாற்றங்களை உண்டாக்கும். காட்டாக, நீர்க் கொள்வதற்கு அறிகுறியாகத் தும்மல் வரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நஞ்சு