மருத்துவம் :: சில அடிப்படைகள்
11. ஊசி போடுதல் என்றால் என்ன?
ஊசிமூலம் மருந்துகளை உடலினுள் செலுத்தல். உடன் பயன் தெரியும்.
12. தடுப்பூசி போடுதல் என்றால் என்ன?
திசுவில் நுண்ணுயிர்களை ஆவைன்களாகச் செலுத்துதல். காலரா தடுப்பூசி.
13. அலகிடுதல் என்றால் என்ன?
மின்னணுக் கதிர்கள் கொண்டு உடல் உறுப்புகளை ஆராய்தல். மருத்துவத்தில் முன்னேறிய முறை.
14. எக்ஸ் கதிர்களை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?
1895இல் இராண்ட்ஜன் என்பவர் கண்டுபிடித்தார்.
15. இவற்றின் இயல்புகள் யாவை?
குறுகிய அலை நீளமுடையது. எலும்பு தவிர மற்ற எல்லாப் பொருள்களிலும் ஊடுருவுவது.
16. இவற்றின் பயன்கள் யாவை?
உடலின் எல்லாப் பகுதிகளையும் ஆராய்ந்து பர்க்க மருத்துவத்தில் பயன்படுவது.
17. பேரியக் குடல் கழுவல் என்றால் என்ன?
வாய் வழியாகப் பேரியம் சல்பேட் உட்கொள்ளப் படுதல். இதனால் மேல் இரைப்பை - சிறுகுடல் வழி ஆய்வுக்கு ஏற்றதாகும்.
18. பேண்டிங் பத்திய உணவு என்றால் என்ன?
அதிக உடல் பருமனைக் குறைக்க எடுத்துக் கொள்ளப்படுவது. உயர் புரத அடக்கமும் குறைந்த மாப்பொருள் அடக்கமும் உள்ளது.
19. முழங்கால் மறிவினை என்றால் என்ன?
முழங்கால் உதறல். முழங்கால் பந்தகம் தட்டப்படுவதால் கால் முன்தள்ளப்படுதல். இது மருத்துவர் செய்யும் ஆய்வு.
20. வயிற்றறை நோக்கல் என்றால் என்ன?
இடுப்புப் பகுதிகளை அகநோக்கி மூலம் ஆராய்தல். இது வயிற்றுறை வழி ஆராயப்படும். இதற்குப் பயன் படும் கருவி வயிற்றறை நோக்கி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, முழங்கால்