மருத்துவம் :: சில அடிப்படைகள்
71. குளிர்ப்பாய்மம் என்றால் என்ன?
குளிர்விக்கப் பயன்படும் நீர் அல்லது வளி.
72. நீர்க்குளியல் என்றால் என்ன?
21 செ. உள்ள நீர். இது உடல் திசுக்களை ஊக்குவிக்கும்.
73. கதகதப்பான நீர்க்குளியல் என்றால் என்ன?
வெப்பநிலை 40 செ. உள்ள நீர்.
74. வெந்நீர்க் குளியல் என்றால் என்ன?
இதன் வெப்பநிலை 42 செ. இவ்விரண்டும் வலியைத் தணிக்கும். ஊடுருவி ஊக்கம் அளிக்கும்.
75. ஒற்றி என்றால் என்ன?
கம்பளம், பஞ்சு முதலிய துண்டுகள் புண்களைத் துடைக்கவும் குருதியை அறுவையின் பொழுது நீக்கவும் பயன்படுவது.
76. ஒசோனின் பயன் யாது?
ஒரு தொற்று நீக்கி.
77. கேயோலின் என்றால் என்ன?
சீனக் களிமண். அலுமினியத்தின் நீரேறிய சிலிகே.ட்
78. இதன் இரு வகைகள் யாவை?
1. கன கேயோலின் ஒற்றடை செய்ய.
2. இலேசான கேயோலின் இது ஒரு பரப்பூன்றி, எரிச்சல் அடக்கி. ஆகவே, கழிச்சல் கலவை மருந்தாகப் பயன்படுவது.
79. ஓரிமங்கள் என்றால் என்ன?
ஓரிடத் தனிமங்கள். வேறுபட்ட நிறையும் ஒரே அணு எண்ணும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள். கதிரியக்கத் தனிமங்கள். மருத்துவத்தில் நோயைக் குணப்படுத்தவும், நோயறியவும் பயன்படுபவை.
80. நாண் பொருள்கள் என்பவை யாவை?
பட்டுநூல்,கம்பி, நைலான் முதலியவை. இவை தமனிகளைக் கட்டவும் திசுக்களைத் தைக்கவும் பயன்படுபவை. தையல் பொருள்கள் என்றுங் கூறலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கேயோலின், நீர்