மருத்துவம் :: சில அடிப்படைகள்
21. குணப்படுத்தல் என்றால் என்ன?
நோய் அல்லது உறுப்புச் சிதைவைப் போக்குதல்.
22. உறுத்துணர்ச்சி என்றால் என்ன?
துண்டலுக்கேற்ற துலங்கல். உயிரியின் இயல்புகளில் ஒன்று.
23. கலோரி என்றால் என்ன?
வெப்ப அலகு. ஒரு கலோரி வெப்பம் என்பது ஒரு கிலோ கிராம் நீரை ஒரு செல்சியஸ் பாகைக்கு உயர்த்த தேவையான வெப்பம்.
24. ஒரு கிராம் மாப்பொருள் தரும் வெப்பம் எவ்வளவு?
4 - 1 கலோரி.
25. ஒரு கிராம் புரதம் தரும் வெப்பம் எவ்வளவு?
4 - 1 கலோரி.
26. ஒரு கிராம் கொழுப்பு தரும் வெப்பம் எவ்வளவு?
9 - 3 கலோரி.
27. வெப்ப நிலை என்றால் என்ன?
உடல் சூட்டின் அளவு. பாகையில் தெரிவிக்கப்படுவது. நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 செ. நோயாளி அறையின் சராசரி வெப்ப நிலை 16-18 செ.
28. உள்பார்வை வில்லை (ஐஒல்) என்றால் என்ன?
தொடுகண் வில்லை போன்றது. பிளாஸ்டிக்காலான மெல்லிய வட்டு. கண்புரையினால் விழிவில்லை நீக்கப்பட்டவருக்குப் பொருத்தப்படுவது.
29. அனைத்து அல்லது இல்லை விதி என்றால் என்ன?
திசுக்களின் உறுத்துணர்ச்சி பற்றிய உடலியல் விதி, எ-டு. நரம்புகள். இவ்விதியில் இரண்டு வினைகளே ஒரு தூண்டுதலுக்கு உள்ளன. ஒன்று வினை இல்லை. மற்றொன்று முழுத் தூண்டல்.
30. ஆட்லர் கொள்கை யாது?
தாழ்வு மனப்பான்மையை ஈடுகட்ட மக்கள் நரம்புக் கோளாறுகளை உண்டாக்குகிறார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வெப்பம், கலோரி, கிராம், எவ்வளவு, வெப்ப, தரும்