மருத்துவம் :: சில அடிப்படைகள்
81. ஒட்டுத்துணி என்றால் என்ன?
தளர்ச்சியாக நெய்யப்பட்ட பஞ்சுப் பொருள். ஒரு பக்கம் மென்மையாகவும் மற்றொரு பக்கம் கரடாகவும் இருக்கும். மென்மைப் பகுதி தோலுடன் ஒட்டுமாறு செய்யப்படும். அறுவை ஒத்தடங்களுக்கும் பதவாடைகளுக்கும் பயன்படுவது.
82. தடவுபொருள் என்றால் என்ன?
நுண்ணோக்கியில் ஆய்ந்து பார்க்க, நீர்ம நிலையில் குருதி முதலிய பொருள்களைச் சிறிது கண்ணாடி வில்லையில் தடவுதல்.
83. பாரிஸ் சாந்து என்றால் என்ன? அதன் பயன் யாது?
தூள் நிலைக் கால்சியம் சல்பேட் நீருடன் சேர்க்க இறுகிக் கடினமாகும். எலும்புகளுக்கு கட்டுப் போடப் பயன்படுவது.
84. கட்டு என்றால் என்ன?
தாங்குவதற்காகவும் அழுத்தம் அளிப்பதற்காகவும் பயன்படும் துணி.
85. முக்கோணக்கட்டு என்றால் என்ன?
36 அங்குலச் சதுரத் துணியைக் குறுக்காக வெட்டித் தயார் செய்தல். நெருக்கடி நிலைகளிலும் சிறு விபத்துகளுக்கும் பெரிதும் பயன்படும்.
86. எலஸ்டோபிளாஸ்ட் கட்டு என்றால் என்ன?
இது ஒர் ஒட்டும் கட்டு. துத்தநாக ஆக்சைடு கொண்டது.
87. பிரான் சிம்பு என்றால் என்ன?
கீழ்ப்புறத்துறுப்புக்குரிய நீள்கருவியும் சிம்பும் சேர்ந்தது.
88. சிம்பு என்றால் என்ன
எலும்பு முறிவுக்கு மேலும் கீழும் வைத்துக் கட்டப் பயன்படும் பட்டை
89. ஆய்வு என்றால் என்ன?
ஒரு பொருளின் இயல்பை முடிவு காணச் செய்யப்படுவது. எ-டு. சிறுநீர்ச் சர்க்கரை ஆய்வு.
90. குறையறிதேர்வு என்றால் என்ன?
குறைகளுக்குரிய காரணம் அறிதல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில அடிப்படைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பயன்படும், கட்டு