கணிதம் :: அலகியலும் அளவியலும்
51. அடுக்கு (பவர் என்றால் என்ன?
ஓர் அளவு தன்னைத்தானே பல தடவைப் பெருக்கிக் கொள்ளுதல், எ-டு. 24=2×2×2×2 =16.
52. அடுக்கு வரிசை என்றால் என்ன?
இரண்டின் நான்கடுக்கு அல்லது நான்கின் அடுக்கிற்கு இரண்டு a0+a1 x+a2x2+....+anxn என்னும் வடிவத்தின் வரிசையே அடுக்கு வரிசை.
53. மாறும் அடுக்கு (exponentia) என்றால் என்ன?
மற்றொரு அளவின் அடுக்கு போல ஒரு சார்பு அல்லது அளவு மாறுபடுதல், எ-டு. : y=4x என்பதில் x தொடர்பாக y அடுக்கு முறையில் மாறுபடுவது.
54. விரிவு என்றால் என்ன?
உறுப்புகள் வரிசையின் கூட்டுத்தொகை வரிசையாகத் தெரிவிக்கப்படுகிறது. எ-டு. (x+1)(x+2) என்பதை x2+3x+2 என்று விரிவுபடுத்தி எழுதலாம். சில வகைக் கோவைகளை விரிவாக்கப் பொது வாய்பாடுகள் உண்டு. எ-டு. (1+x)n.
55. படிக்குறி (எக்போனண்ட்) என்றால் என்ன?
ஒரு கோவைக்குப் பின் அமையும் மேற்குறி. அதன் அடுக்கு உயர்வைக் காட்ட எழுதப்படுவது. இக்குறி ஒரு எண் அல்லது குறிபாடாக இருக்கும். எ-டு. : yx, (ay+b)x இல் x என்பது படிக்குறி.
56. வர்க்கம் என்றால் என்ன?
இருபடி, ஓர் எண் அல்லது மாறியின் இரண்டாம் அடுக்கு x இன் படியாவது x+x=x2.
57. வர்க்கமூலம் என்றால் என்ன?
இருபடிமூலம் எந்த ஒரு வீதமுறு எண் தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் பொழுது, கொடுக்கப் பெற்றுள்ள வீதமுறு எண்ணைத் தருகிறதோ அந்த வீதமுறு எண் கொடுக்கப் பெற்றுள்ள வீதமுறு எண்ணின் வர்க்க மூலமாகும். எ.டு 9 இன் வர்க்கமூலம் 3.
58. அகப்பண்பி (subject) என்றால் என்ன?
இயற்கணித வாய்பாட்டில் முதன்மைச் சாரா மாறி, எ-டு. y=f(x)=2x2+3x என்னுங் கோவையில் y என்பது வாய் பாட்டின் பொருள்.
59. பரிமாற்று (commutative) என்றால் என்ன?
சேர்க்கை வரிசைச் சாரா செயல் குறித்து ஈருறுப்புச் செயல் பரிமாற்றமுடைய பொதுவான எண்கணிதம், பெருக்கல், கூட்டல் முதலியவை பரிமாற்றச் செயல்களே. இதற்குப் பெருக்கல் பரிமாற்று விதி, கூட்டல் பரிமாற்று விதி என்று பெயர். கழித்தலும் கூட்டலும் பரிமாற்றுச் செயல்கள் அல்ல.
60. வீதமுறா மூலம் (surd) என்றால் என்ன?
ஒரு துல்லியமற்ற சொல். வீதமுறா மூலங்கள் தொடர் பாகப் பயன்படுவது. எ-டு. √2 அல்லது √3+3√5.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அடுக்கு, அல்லது, வீதமுறு, பரிமாற்று