கணிதம் :: அலகியலும் அளவியலும்
11. வரையறை என்றால் என்ன?
ஒர்.அளவீட்டில் அளக்கப்படும் அளவின் உண்மை மதிப்பைப் பிரதிபலிக்கும் கருவி அளவீட்டின் துல்லியம்.
12. அளவுக்காரணி என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட மையத்தில் விரிவாக்கப்படும் பொழுது, ஒரு பொருளின் நீள் அளவீட்டிற்குரிய பெருக்கு காரணி. இக்காரணி மிகை குறை அல்லது பின்னமாக இருக்கலாம். மிகை - உருபெரிது. குறை - உரு சிறியது.
13. அறிவியல் குறிமானம் என்றால் என்ன?
திட்டவடிவம் 1, 10 ஆகிய இரண்டிற்கிடையே 10 இன் அடுக்குடன் ஓர் எண்ணின் பெருக்கற்பலனாக எழுதும் எண். எ-டு. 2342.6 என்பது 23426 × 104 என்று எழுதப்படும்.
14 ரேடியன் என்றால் என்ன?
தளகோணத்தை அளக்கும் எஸ்ஐ அலகு.
π ரேடியன்கள் = 180°.
15. ரேடியன் அளவை என்றால் என்ன?
ரேடியன் 1° என்பது ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான வில்லின் வட்ட மையத்தில் தாங்கப்படும் கோனஅளவு.
16. திருத்தமாக எழுதுதல் என்றால் என்ன?
2.87132971 என்பதை 2.87132 என்று குறைத்து எழுதுதல். ஆனால், இதை 2.87133 என்று திருத்த வேண்டும்.
17. சமமதிப்பு என்றால் என்ன?
ஒரே மதிப்புள்ள இரு அளவுகளுக்கிடையே உள்ள உறவு. இது தொடர்பாகப் பயன்படும் குறிபாடுகள்
1. ≠ - சமமில்லை.
2. = - சமம்.
3. ≈ - தோராயம்.
4. ≡ - துல்லியமாகச் சமம்.
5. ≌ - அணுகாச்சமம்.
18. சாராமாறி என்றால் என்ன?
தானே மாறுபடும்பொழுது, மற்றொரு மதிப்பைத் தாக்கும் அளவு. எ-டு. z என்னும் மாறி x, y என்னும் மாறிகளின் சார்பு எனில், z = f (x,y), பின் x, y என்பவை z ஐ உறுதி செய்யும் சாராமாறிகள்.
19. சுட்டளவு என்றால் என்ன?
வெப்பநிலை, அழுத்தம் அண்மைத் தொலைவு முதலியவை.
20. மட்டு என்றால் என்ன?
ஒர் அளவின் தனி மதிப்பு. இதில் அதன் குறி, திசை ஆகியவை கருதப்படுவதில்லை. எ-டு. 5 இன் மட்டு -5 என்று எழுதப்படும். இது 5 ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ரேடியன்