கணிதம் :: அலகியலும் அளவியலும்

41. கோடேஜண்ட் என்றால் என்ன?
இணைதொடுகோடு. ஒரு கோணத்தின் முக்கோன அளவுச் சார்பு அதன் தொடுகோட்டின் தலைகீழிக்குச் சமம். அதாவது,
காட் ∝ = 1/டேன் ∝.
42. கோத் என்றால் என்ன?
பரவளை கோடேன்ஜண்ட்
43. புறவைப்பு என்றால் என்ன?
அறியப்பட்ட மதிப்புகளுக்கு அப்பால் ஓர் அளவு அல்லது சார்பின் மதிப்பை மதிப்பிடும் முறை. இதை எண்கள் மூலமாகவும் வரைபடம் மூலமாகவும் செய்யலாம். . .
44. தொடர் (series) என்றால் என்ன?
ஒரு தொடரினத்தின் உறுப்புகளைக் கூட்டுவதால் கிடைப்பது. எ-டு.
1+3+5+7+9 முடிவுள்ள தொடர்.
1+3+5+7+9+.... முடிவற்ற தொடர்.
45. தொடரினம் (sequence) என்றால் என்ன?
தொடர்வரிசை n எனக் குறிக்கப்பட்ட ஒவ்வொரு மிகை எண்ணுக்கும் இயைபாக, ஏதேனும் ஒரு விதிப்படி an என்னும் ஒரே ஒரு எண் அமையப்பெறுமானால், a1 a2 a3.... an என்னும் வரிசைப்படுத்திய கணம் ஒரு தொடரினத்தை உறுதி செய்வது. a1 a2... என்னும் எண்கள் தொடரின் உறுப்புகள் ஆகும்.
an என்பது தொடரின் n ஆம் உறுப்பு பொதுஉறுப்பு ஆகும்.
46. தொடரினத்தை எவ்வாறு அமைப்பவது?
அதன் உறுப்புகள் அமையும் விதி அல்லது n-ஆம் உறுப்புக்கான வாய்பாடு தெரிந்தால் போதும்.
47. டெய்லர் தொடர் என்றால் என்ன?
டெய்லர் விரிவு. f(x) என்னும் சார்பை விரிவுபடுத்தி எழுதும் வாய்பாடு. x=a என்னும் மாறிக்குரிய நிலையான மதிப்பின் வகைக்கெழுவின் வரம்பற்ற தொடர்களை எழுதி இதைச் செய்ய இயலும். f(x)=f(a)+f'(a)(x-a)+f''(a)(x-a)2/2! + f'''(x-a)3/3!+....a=0 என்றால் வாய்பாடு பின்வருமாறு:
f(κ) =f'(Ο) + f'(0)x +f''(0)x2/2!+...
இதற்கு மெக்கலிரின் விரிவு என்று பெயர்.
48. போரியர் தொடர் என்றால் என்ன?
சைன்களாகவும் கோசைன்களாகவும் உள்ள முடிவிலா வரிசையாகத் தெரிவிக்கும் முறை.
49. இடவடிவியல் வெளி என்றால் என்ன?
X என்னும் கணம் எல்லா உட்கணங்களையுங் கொண்ட T என்னும் கணத்தைக் கொண்டிருப்பது. Ø∈T; x∈T என்னும் நிபந்தனைகளை நிறைவு செய்வது.
U∈T, V∈T என்றால், பின் (U∪V)∈T, (U∩V)∈T.
T இன் உறுப்புகள் X என்னும் இடவடிவியல் வெளியின் திறந்த கணங்கள்.
இந்நிபந்தனைகளை நிறைவு செய்வதும் வடிவியல் உருவத்தைத் தோற்றுவிப்பதுமான எப்புள்ளிகளின் கணமும் ஒரு இடவடிவியல் வெளியே. அதன் திறந்த கணங்களின் பண்புகளால் தன் இடவடிவியல் வரையறை செய்யப்படுகிறது.
50. தொடர்புப் போக்குக் கோடு என்றால் என்ன?
y = ax + b என்னும் கோடு x இல் y இன் தொடர்புக் கோடாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்னும், என்ன, தொடர், இடவடிவியல், உறுப்புகள், வாய்பாடு