கணிதம் :: அலகியலும் அளவியலும்

231. சுற்றளவு என்றால் என்ன?
ஒரு தள உருவத்தின் முனையைச் சுற்றியுளள்ள தொலைவு. எ-டு. ஒரு செவ்வகத்தின் சுற்றளவு இரண்டு நீளமும் அகலமும் சேர்ந்தது ஆகும். ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் பரிதியாகும்.
232. வில் என்றால் என்ன?
ஒரு தொடர் வளைகோட்டின் பகுதி. ஒரு வட்டத்தின் பரிதி. இது சமமற்ற பகுதிகளாகப் பிரிக்கப்படுமானால், சிறிய பகுதி சிறு வில். பெரிய பகுதி பெரிய வில்.
233. இதன் வகைகள் யாவை?
1. வில் கோசெகண்ட்
2. வில் கோசெக்.
3. வில் கோஷ்.
4. வில் கோசைன்.
5. வில் கோடெஜண்ட்
6. வில் செக்
7. வில் சைன்.
8. வில்சின்.
9. வில் தொடுகோடு.
234. வளைதளம் (torus) என்றால் என்ன?
வட்ட வளையம் அல்லது நங்கூர வளையம். தன்னுள் துளைகளைக் கொண்ட ஒரு மூடிய வளைபரப்பைக் கொண்டது. டயரின் உட்குழாய் போன்றது. வட்டத்தைப் போலவே ஒரே தளத்தில் அமையும். ஓர் அச்சைச் சுற்றி ஒரு வட்டத்தைச் சுழற்றி இதை உண்டாக்கலாம்.
இதன் கனஅளவு = 4πRdr2.
இதன் மேற்பரப்பு = 3π2rd.
இங்கு r என்பது உருவாக்கும் வட்ட ஆரம். d என்பது மையத் தொலைவு.
கார்ட்டீசியன் ஆயங்களில் இதன் சமன்பாடு
√[(x2+y2)-d2] + Z2 = r2.
235. சமமின்மை என்றால் என்ன?
சமமில்லா இரு கோவைகளுக்கிடையே உள்ள தொடர்பு. குறியுடன் எழுதப்படுவது. > அதிகம் < குறைவு. x< 4 என்றால் பின் x2 < 16. y2 > 25 என்றால் பின் y> 5.
236. கயிற்று வளைவு என்றால் என்ன?
இரு புள்ளிகளிலிருந்து தொங்கவிடப்பட்ட நெகிழ்வுள்ள ஒரே சீரான கோட்டின் தள வளைவு. எ-டு. இரு முனைகளில் தொங்கவிடப்பட்டுள்ள வெற்றுக்கொடி அவற்றிற்கிடையே தடையின்றித் தொங்குவது கயிற்று வளைவு ஆகும். இதற்குரிய சமன்பாடு.
y= (a/2)(ex/a + e-x/a)
237. கயிற்று வளைவரை என்றால் என்ன?
சமச்சீர் அச்சில் சுழற்றும்பொழுது கயிற்று வளைவினால் உண்டாக்கப்படும் வளைபரப்பு.
238. விரிவு என்றால் என்ன?
வடிவியல் படமாக்கல் அல்லது வீழல். இதில் ஒர் உருவம் நீட்டப்படும். எ-டு. ஒரு செவ்வகத்தில் ஒரு சதுரத்தை வீழச் செய்யலாம் அல்லது ஒரு கன சதுரத்தை ஒரு கனச் சதுரச் செவ்வகத்தால் அமைக்கலாம்.
239. மாறிமாறியமைதல் என்றால் என்ன?
ஒன்றுவிட்டு ஒன்று அமைதல்.
240. மாறுநிலைவழி என்றால் என்ன?
சிக்கலான முறை, பணி முதலியவற்றை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் செயல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், வில், என்ன, கயிற்று, இதன், வளைவு, பகுதி, சுற்றளவு, அல்லது