கணிதம் :: அலகியலும் அளவியலும்
1. அலகியல் என்றால் என்ன?
அளவீட்டு அலகுகளையும் துல்லிய அளவீடு முறைகளையும் ஆராயும் துறை.
2. அலகு என்றால் என்ன?
ஒரே அளவுள்ள மற்ற மதிப்புகளைத் தெரிவிக்கப் - பயன்படும் ஓர் அளவின் பார்வை அல்லது ஒப்பீட்டு மதிப்பு.
3. ஓரியல் அலகுகள் என்றால் என்ன?
துணை அலகுகள். எ-டு. எஸ்.ஐ. அலகுகள்.
4. அளவியல் (mensuration) என்றால் என்ன?
வட்டம், நாற்காரம். உருளை, கோளம் போன்றவற்றின் பரப்பு, கனஅளவு, சுற்றளவு ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் முறைகளை விளக்குந்துறை.
5. இதில் Π இன் மதிப்பைக் காணும் வாய்பாடு என்ன?
π = வட்டத்தின் சுற்றளவுவட்டத்தின் விட்டம்
6. Π இன் தற்காலக் கண்டுபிடிப்பு யாது?
இதன் மதிப்பு இதுவரை சரியாகக் கண்டுபிடிக்கப் படவில்லை. இருப்பினும், அதன் மதிப்பு சுழல் தசம எண்களில் ஆனதன்று என்று மட்டும் கண்டுபிடித்துள்ளனர்.
7. அளவு என்றால் என்ன?
ஒரு வரைபடத்தின் அச்சுகளின்மீது உண்டாக்கப்படும் குறியிடல்கள் அல்லது அளவு கருவியிலும் குறியிடல்கள் அமையலாம். ஓர் அளவகத்தின் (quantity) மதிப்புகளை இக்குறியிடல்கள் ஒத்தவை. எ-டு. வெப்பநிலைமாணி யிலுள்ள குறியிடல் 1மிமீ என்பது 1° செ என்பதைக் குறிக்கும்.
8. தலைகீழி என்றால் என்ன?
ஒர் அளவினால் எண்.1ஐ வகுத்தல். 2இன் தலைகீழி 1/2. ஒரு கோவையின் பெருக்கற்பலனும் அதன் தலைகீழியும் எச்சார்புக்கும் பெருக்கு நேர்மாறல் தலைகீழி ஆகும்.
9. அளவுத்திட்டம் என்றால் என்ன?
ஒரு படத்தில் இரு புள்ளிகளுக்கிடையே ஒரு கோட்டின் நீளத்திற்கும், குறிக்கப்படும் தொலைவிற்குமுள்ள வீதம். எ-டு. ஒரு படத்தில் 5 கிமீ தொலை இடைவெளியிலுள்ள இருபுள்ளிகள் 5 செமீ இடைவெளியில் இருப்பதாகக் காட்டப்படும் அதாவது 1/100000 என்னும் அளவுத் திட்டம்.
10. மர்கட்டர் வீழல் என்றால் என்ன? அதன் பயன் யாது?
கோணப்பரப்பில் இருந்து தளப்பரப்புக்குப் புள்ளிகளை உருமாற்றும் முறை. உலகப் படங்களை உருவாக்கப் பயன்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், தலைகீழி, மதிப்பு, அலகுகள்