கணிதம் :: அலகியலும் அளவியலும்

21. ஒருகோடமை என்றால் என்ன?
ஒரே நேர்க்கோட்டில் அமையும். எ-டு. எவ்விரு புள்ளிகளையும் ஒரு கோடு அமைவன என்று கூறலாம். ஏனெனில், அவை இரண்டின் வழியாக நேர்க்கோடு செல்லும். அதேபோல, ஒரே புள்ளியில் அவை இரண்டும் செயற்பட்டாலும் இணையாக இருந்தாலும், இருதிசைச் சாரிகளை ஒருகோடு அமைவன எனலாம்.
22. விரைவு என்றால் என்ன?
ஓரலகு நேரத்தில் நகர்ந்த தொலைவு c = d/t. இது ஒரு திசையிலி.
23. முடுக்கம் என்றால் என்ன?
காலத்திற்கேற்ப விரைவின் மாற்ற வீதம். எஸ்ஐ அலகு
மீட்டர் / வினாடி, ms2.
நிலைமுடுக்கச் சமன்பாடு.
a= (V2 - V1)/t.
a - முடுக்கம், V1 - தொடக்க விரைவு. V2 - முடிவு விரைவு.
24. காலநிகழ் இயக்கம் என்றால் என்ன?.
ஒழுங்காக மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்க வகை எ-டு. ஊசல் ஆட்டம், செயற்கைநிலா சுற்றுதல். ஒரு தூய சைன் அலையாக இயக்கம் கோவைப்படுத் தப்படுமானால், அது தனிச்சீரிசை இயக்கமாகும். பொதுவாக, இரண்டிற்கு மேற்பட்ட தூய சைன் அலைகளின் கூட்டுத்தொகையால் பெறப்படுபவை சீரிசை இயக்கங்கள்.
25. சீரிசை இயக்கம் என்றால் என்ன?
ஒழுங்காக மீண்டும் மீண்டும் வரிசையாக நடைபெறும் இயக்கம். சைன் அலைகள் தொகுதிக் கூட்டுத்தொகையாகத் தெரிவிக்கப்படுபவை. ஒவ்வொரு பகுதி சைன் அலையும் இயலக்கூடிய தனிச்சீரிசை இயக்கத்தைக் குறிப்பது.
26. சீரிசைத் தொடர்ச்சி என்றால் என்ன?
தலைகீழி கூட்டுத்தொடர்ச்சியில் இருக்கும்பொழுது, சுழியில்லாத எண்ணின் தொடர்வரிசை. சீரிசை பெருக்கத்தில் இருக்கும் இதன் பொதுவடிவம்.
1/a 1a+d 1a+2d = n ஆவது உறுப்பு.
Tn = 1a+n-1d
அல்லது (1, 1/2, 1/3, 1/4,.... 1n)
27. சீரிசை வரிசை என்றால் என்ன?
ஒரு சீரிசைத் தொடர்வரிசையின் உறுப்புக்களின் கூட்டுத்தொகை.
எ-டு. 1 + 1/2 + 1/3 + 1/4 + ...
28. சீரிசைப் பகுப்பு என்றால் என்ன?
கணிதச் சார்புகளை ஆராயப் பயன்படும் முக்கோண அளவு வரிசை
29. சீரிசைச்சராசரி என்றால் என்ன?
H1 H2.... Hn என்பவை a, b க்கிடையே சீரிசைச்சராசரி எனப்படும். இதற்கு a, H1, H2.... Hn சீரிசைத் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
30. தனிச்சீரிசை இயக்கம் என்றால் என்ன?
சைன் அலையாக வரையப்படும் இயக்கம். எ-டு. ஊசலின் அலைவு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, இயக்கம், சைன், சீரிசை, மீண்டும், சீரிசைத், விரைவு, தனிச்சீரிசை