கணிதம் :: அலகியலும் அளவியலும்
221. முடிச்சு என்றால் என்ன?
வடிவப் பண்பியலில் ஒரு நூலை வளையமாக்கி, அதன் முனைகளைச் சேர்ப்பதனால் உண்டாகும் வளைகோடு. வடிவப் பண்பியலின் ஒரு பிரிவே முடிச்சுகளின் கணிதக் கொள்கை.
222. இடைநிலை என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட இராசிகளை மதிப்புகளின் ஏறுவரிசையிலோ இறங்குவரிசையிலோ அமைத்தபின், கிடைக்கும் நடு உறுப்பின் மதிப்பே இடைநிலை.
223. பெரும வாய்ப்பு நிலை என்றால் என்ன?
ஒரு சுட்டளவின் பெருமளவு வாய்ப்பு மதிப்பைக் கணக்கிடும் முறை.
224. பெருமப் புள்ளி என்றால் என்ன?
சார்பு வரைபடப் புள்ளி.
225. நீளம் என்றால் என்ன?
கன உருவம், தள உருவம், கோடு ஆகியவற்றின் நெடுக அமையும் தொலைவு. செவ்வகத்தில் இரு பருமன்களில் மிகப் பெரியதாக இருப்பது வழக்கமாக நீளம் என்றும் சிறியதாக இருப்பது அகலம் என்றும் கூறப்படும்.
226. பருமன் பகுப்பு என்றால் என்ன?
இயற்பியல் அளவுகளின் பருமன்களை அவற்றிற் கிடையே உள்ள உறவுகளைச்சளி பார்க்கப் பயன்படுவது. ஐன்ஸ்டீன் சமன்பாடு E=mc2 சரி பார்க்கப் படலாம். தவிர, ஒர் அளவின் அலகுகளைப் பெறவும் புதிய சமன்பாடுகளைத் தேற்றமாகக் கூறவும் இப்பகுப்பு பயன்படும்.
227. இருபருமன் என்றால் என்ன?
நீளமும் அகலமும் கொண்ட வட்டங்கள், சதுரங்கள், நீள் வட்டங்கள் முதலிய தட்டை வடிவங்கள் இரு மாறிகளைப் பயன்படுத்தி ஓர் ஆயத் தொகுதியில் வண்ணனை செய்யப்படலாம். எ-டு. .x-அச்சு, y-அச்சுடன் கூடிய இரு பருமக் கார்ட்டீசியன் ஆயங்கள்.
228. முப்பருமன் என்றால் என்ன?
நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி, ஓர் ஆயத் தொகுதியில் முப்பரும உருவத்தை விளக்க இயலும். எ-டு. x - அச்சு, y - அச்சு, z - அச்சு ஆகியவை கொண்ட முப்பருமக் கார்ட்டீசியன் ஆயங்கள்.
229. இணை என்றால் என்ன?
ஒரேதிசையில் விரிந்து தொலைவுக்கு அப்பால் நிலைப்பது. எ-டு. இணைகோடு.
230. இணைக்கோட்டின் பண்புகள் யாவை?
ஒரு தளத்தில் அமைந்து வெட்டிக் கொள்ளாத இரு கோடுகள் இணைகோடுகள் ஆகும்.
1. ஒரு கோடும் அதன் மீது அமையாத புள்ளி ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தால், கொடுக்கப்பட்ட கோட்டிற்கு அப்புள்ளி வழியே செல்லும் இணைகோடு ஒன்றே ஒன்றுதான் உண்டு - யூக்ளிட்டின் இணைகோடு.
2. ஒரு கோடும் அதன் மீது அமையாத ஒரு புள்ளியும் கொடுக்கப்பட்டிருந்தால், அப்புள்ளி வழியே அக்கோட்டிற்கு இணையாக உள்ள கோடுகள் ஒன்றுக்கு மேல் உண்டு. எனவே, எண்ணிலடங்காப் பல கோடுகள் உண்டு - லோபோசெவஸ்கி போல்யா, கவுஸ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, அச்சு, உண்டு, கோடுகள், நீளம், புள்ளி, இணைகோடு