கணிதம் :: அலகியலும் அளவியலும்
191. வட்டம் என்றால் என்ன?
ஒரு நிலையான புள்ளியை மையமாகக் கொண்டு சம தொலைவில் நகரும் புள்ளிகளின் கணமே வட்டம். வட்டத்திற்கு உட்புறம், வெளிப்புறம், எல்லை என மூன்று பகுதிகள் உண்டு.
வட்டப்பரிதி = 2πr.
வட்டப்பரப்பு = πr2
192. உச்சி என்றால் என்ன?
கூம்பகம், தள உருவம் ஆகிய கன உருவப் பொருளின் உச்சியிலுள்ள புள்ளி.
193. குற்றாரம் என்றால் என்ன?
ஒரு பக்கத்தின் மையத்திற்குச் செங்குத்தாகவுள்ள ஒழுங்கான பல கோணத்தின் மையத்திலிருந்து அமையும் கோட்டுத் துண்டு.
194. முகடு (mode) என்றால் என்ன?
புள்ளி விவரத் தொகுப்பில் மிகப் பெரும்பான்மையான முறைகள் காணப்படும் மதிப்பு. இது ஒரு பொருள் அதிகமாகச் செலவழிவதைக் குறிப்பது.
195. பதின்மகம் என்றால் என்ன?
10 நேரான பக்கங்களைக் கொண்ட தள உருவம்.
196. பதின்முகப் பன்முகி என்றால் என்ன?
10 முகங்களைக் கொண்ட பன்முகி.
197. ஏர் என்பது என்ன?
100 சதுர மீட்டர். பரப்பின் மெட்ரிக் அலகு.
198. பரப்பு என்றால் என்ன?
ஒரு தள உருவம் அல்லது பகுதியின் விரிவு. வர்க்கமாக்கப்பட்ட நீள அலகுகளில் அளக்கப்படுவது. எஸ்ஐ அலகு சதுர மீட்டர், m2
199. தளம் என்றால் என்ன?
தட்டைப் பரப்பு. உண்மை அல்லது கற்பனை. இதில் இரு புள்ளிகள் அப்பரப்பில் அமையும் ஒரு நேர்க் கோட்டால் சேர்க்கப்படும்.
200. தளவடிவியல் என்றால் என்ன?
ஒரே தளத்தில் அமையும் வளைகோடு. கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றிற்கிடையே உள்ள உறவுகளை ஆராய்வது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அலகியலும் அளவியலும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், அமையும், உருவம்